மௌன வசந்தம்

கண்ணால் பார்க்க முடியாத ஆனால் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நச்சுப்பொருள் காற்று, நீர், ஆகியவற்றில் ஊடுருவி அமைதியாக மனித உடலிலும் தேங்கி இருப்பது பற்றித் தெளிவான விளக்கங்களைத் தொகுத்து மேலும் மனித உடல் நலத்தில் பூச்சிக்கொல்லிகளின் உடனடி மற்றும் நீண்ட காலப் பாதிப்புகள் என்னவென்று மக்களுக்கு அடையாளம் காட்டுவது மட்டுமின்றி அவற்றால் புற்றுநோய் மற்றும் பிறப்பு ஊனங்களுக்கு வழிவகுக்கும் என்பதையும் அடையாளப்படுத்தியுள்ளார்.

Advertisements

வசந்த கால நாட்கள்!

யாரென்றே அறியாமல் வந்திணைந்த உறவுகளின் ஊற்றேடுப்பு இந்த ஏழுநாட்களே! பிரிய மனமின்றி பிரிந்து கண்களில் கண்ணீர் கொண்டதும் இந்த ஏழுநாட்களே!

அப்பத்தா கொடுத்த அமிர்தம்!

சரி நாம் மருத்துவரை நாடுவதில்லை என்று முடிவான பின்பு என்ன செய்ய வேண்டும் நமக்குத் தேவையான மருந்துகளை நம் உணவில் தேட வேண்டும், என்ற தேடலில் என்னுள் சில மாற்றங்கள் கொண்டேன் ஆம் இங்கே நான் கேட்பாரற்று கிடக்கும் அனாதையாய் கையேந்தி பிழைக்கும் வேற்று ஊரான் ஆகையால் இங்கே நினைக்கும் செயலை நான் நிறைவேற்ற முடியும். 

பிராயிலர் பள்ளிகள்!

இப்போது முடிவு செய்ய வேண்டியது நாம் தான். நமது பிள்ளைகள் அறிவு பெற கல்வியளிக்கிறோமா அல்லது அடிமையாவதற்காகக் கல்வியளிக்கிறோமா? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த பட்சமாகவாவது ஒரு சமூக அறிமுகம் கிடைக்கிறது. அவர்களுக்கு பல்வேறு வர்க்கத் தட்டைச் சேர்ந்தவர்களோடு பழகவும், அவர்களது வாழ்க்கையை அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. பள்ளிக்குச் செல்வது மதிப்பெண்களைப் பெறுவதற்காக மட்டுமா அல்லது மனித ஆளுமையை உருவாக்கிக் கொள்வதற்கா? அதைச் சில முதலாளிகள் தீர்மானிப்பதா ? என்பதைப் பெற்றோர்கள் முடிவு செய்யட்டும்.

மறந்தால் அன்றோ நினைப்பதற்கு!

பால்: காமத்துப்பால் இயல்: களவியல் அதிகாரம்: காதற்சிறப்புரைத்தல் குறள்: உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம் பொருள் : ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு. வாழும் வள்ளுவன் திரு. பாலகிருஷ்ணன் R அவர்களின் நாட்டுக்குறல் எம்மை ஏட்டில் வரா காமத்துப்பால் படிக்க வைத்தது! அதனை தொடர்ந்து காதற்சிறப்புரைத்தல் அதிகாரத்தின் வள்ளுவன் கூறிய உலகப்பொதுமறையின் பொருளை கொண்டு திணையும் காலமும் கவியாய்! இதோ

மதிப்பெண்ணை தாண்டி மனிதத்தை உருவாக்கும் பள்ளி!

மாணவர்களே நம் வருங்கால சமுதாயம் அப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்குவதில் பள்ளிகள் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் இன்றைய சூழ்நிலைகளில் நல்ல மாணவர்களைப் பள்ளி உருவாக்குகிறதா என்பது சந்தேகமே. மாணவர்களை மதிப்பெண் எடுக்க வைக்கும் இயந்திரமாகப் பயன்படுத்தி பள்ளிகள் லாபம் மேற்கொள்வதை இக்காலத்தில் நாம் கண்டும் காணாதது போல் இருப்பது காலத்தின் கொடுமை. கறிக்காக வளர்த்தப்படும் பிராய்லர் கோழிகளைப் போல மாணவர்களையும் பள்ளிகள் மதிப்பெண்களுக்காகவே வளர்க்கின்றனர். மாணவனின் மனநிலை என்ன? வருங்காலத்தில் அவன் சமுதாயத்தை எதிர்கொள்ளப் போகும் நிலை … Continue reading மதிப்பெண்ணை தாண்டி மனிதத்தை உருவாக்கும் பள்ளி!

அன்புள்ள கிரண்பேடிக்கு ஒரு சாமானியனின் கடிதம்!

அன்புள்ள Kiran Bedi #கிரண்பேடிக்கு, உங்களைப் பற்றி பள்ளி காலங்களில் இருந்து மிகப் பெருமையாக படித்திருக்கிறேன், ஒரு பெண்ணாக டெல்லியில் நீங்கள் செய்த அசாதாரண செயல்களை கண்டு பெரிதும் வியந்துள்ளேன். அப்போதெல்லாம் நீங்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பெண்களுக்கு ஓர் பெரிய முன்னுதாரணமாகவும் ஊக்குவிப்பாகவும் இருப்பீர்கள் என்று நம்பினேன், அது வீண் போகவில்லை ஆம் எத்தனையோ தோழிகள், முகமறியா சகோதரிகள் IPS, IAS தேர்வுகளில் வெற்றி பெற்றபோது உங்களை முன்மாதிரியாகக் கொண்டே அவர்கள் வென்றனர் என்ற பேட்டிகளை கண்டு ரசித்திருக்கிறேன். … Continue reading அன்புள்ள கிரண்பேடிக்கு ஒரு சாமானியனின் கடிதம்!