கடலும் கண்ணாடித் தொட்டியும்!

கடலில் உள்ள மீன்கள்

கண்ணாடித் தொட்டியை காதலிப்பதை போன்றது

என்னைப் போன்ற விவசாயி மகன்களின்

மென்பொருள் தொழில்நுட்ப வேலை!

-குமரேசன் செல்வராஜ் 

Advertisements

பாமரனும் படித்தவனும்!

download

மனிதன் பாமரனாய் இருந்த வரை முதலாளியாக இருந்தான்

பட்டதாரி ஆனபின்பு தொழிலாளியாகவும் கொத்தடிமையாகவும் உள்ளான்…

– குமரேசன் செல்வராஜ் 

 

நான் கெட்டவனை கொண்ட நல்லவன்‬…

எல்லா நல்லவனுக்குள்ளும் ஒரு கெட்டவன் இருக்கிறான்..
எல்லா கெட்டவனுக்குள்ளும் ஒரு நல்லவன் இருக்கிறான்…
நேரம் வரும்போது இரண்டும் வெளிபடுகின்றன..

– குமரேசன் செல்வராஜ்