Posted in கட்டுரைகள், நூல் மதிப்புரை

துப்பட்டா போடுங்க தோழி | நூல் அறிமுகம்

துப்பட்டா போடுங்கள் தோழி இந்த சொற்றொடரை நிறைய முகநூல் பதிவுகளில் நாம் பார்த்து இருப்போம் அத்தகைய சொல்லாடல்கள் பின்னால் இருக்கக்கூடிய ஆணாதிக்க சிந்தனைகளை நாம் பெரிதாய் கண்டுகொள்வதில்லை, தன் சாதியை மதத்தை அதன் பெருமைகளைப் பறைசாற்றிக்கொள்ளக் கிடைக்கப்பட்ட ஒரு கருவியாகவே பெண்ணும் பெண்ணை சுற்றிய இயக்கங்களும் நடைபெறுகின்றன, மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாகப் பல பங்கு வகிக்கும் பெண்ணுடைய சொந்த உடல் மீதும் உரிமை மீதும் அவளுக்கே உரிமை இல்லாமல் செய்துவிடுகிறது இந்த சமுதாயத்தின் கற்பிதங்கள்.

Continue reading “துப்பட்டா போடுங்க தோழி | நூல் அறிமுகம்”
Posted in நூல் மதிப்புரை

நகலிசைக் கலைஞன் | நூல் அறிமுகம்

2019 ஏதோ ஒரு நன்நாளில் youtube பக்கத்தில் கரு.பழனியப்பன் அவர்களின் பேச்சைக் கேட்க அப்போது அறிமுகமானது தான் இந்த நகலிசைக் கலைஞன் என்ற புத்தகம் அன்றிலிருந்து அந்தப் புத்தகத்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. ஆனால் புத்தகத் திருவிழாவிலோ அல்லது மாதாந்திர புத்தகம் வாங்கும் பொழுது நினைவில் வருவதே இல்லை கடைசியாக மே மாதம் 2023 ஆம் ஆண்டு சம்பளம் கைக்கு வந்ததும் புத்தகம் வாங்கக் கிளம்பிய நேரம் முகநூலில் ஜான் சுந்தரே டேக் செய்து இந்த புத்தகத்தைப் பற்றிப் பதிவிட்டிருந்தார்கள்.

அதே நேரத்தில் புத்தகக் கடையிலும் என் கண்ணில் பட்டது உடனே வாங்கி விட்டேன் கையிலிருந்த புத்தகங்களைப் படித்துவிட்டு இந்த புத்தகத்தை எடுத்த நான்கு நாட்களில் எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்போதெல்லாம் எடுத்து எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அந்த youtube காணொளியில் கரு பழனியப்பன் சொன்ன அந்த கிட்டாரிஸ்ட் அந்த பேருந்தில் ஓடிய பாடல் ஆகியவை எந்த தலைப்பு எப்போது வரும் என்று ஆவலுடன் வாசிக்கத் தொடங்கினேன்.

Continue reading “நகலிசைக் கலைஞன் | நூல் அறிமுகம்”
Posted in நூல் மதிப்புரை

ஒளிரும் நூலின் கடைசி இழை | நூல் அறிமுகம்

இக்கவிதை நூலைக் கையில் எடுத்த போது கடந்த ஐந்து மாத கால நினைவுகள் மனதில் வந்து ஒட்டிக்கொண்டன, எப்போதேனும் சந்தித்துச் செல்லும் மனிதர்களிடம் நாம் உரையாடியதோ அவர்களுக்குப் பிடித்தது எனச் சொல்லிச் சென்ற விடயங்களும் நம் கண்ணில் படும்போது அவர்களின் நினைவுகள் நம்மைச் சீண்டிச் செல்லும். எனக்கு இன்னும் சற்று அதிகமாய் அந்தக் காலத்தில் நான் இருந்த நினைவுகள் மற்றும் உணர்வுகளையும் பெறச்செய்யும். இதனைக் கருவாகக் கொண்டது தான் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாம் கவிதை.

Continue reading “ஒளிரும் நூலின் கடைசி இழை | நூல் அறிமுகம்”
Posted in நூல் மதிப்புரை

நரனின் லாகிரி (கவிதை தொகுப்பு) – நூல் அறிமுகம்

நரன் எழுதிய லாகிரி என்னும் கவிதைத் தொகுப்பு சற்றே எல்லாவற்றிலும் இருந்து விலகி ஏதுவாகக் கவிதை எழுதப்படுகிறதோ அதுவாக அதன் கண்களில் நின்று அது காட்டும் உலகைக் காண்பதோடு மட்டுமின்றி அதன் கண்களில் காண்பதையும் நாம் காணும் வகையாக அமைந்திருக்கும்.

இதனை அரசியல் கவிதை என்பதா புரட்சி கவிதை என்பதா ஒடுக்கப்பட்டவரின் குரல் என்பதா விளைவிப்பவனின் வேதனை என்பதா நிலங்கள் பறிக்கப்பட்டு கூலித்தொழில் செய்யும் விவசாயி இன் மனக்குமுறல் என்பதா என்பதைப் படிப்பவரின் பார்வையிலேயே விட்டுவிடுகிறார், மேலும் இந்த கவிதைத் தொகுப்பு 2016 இல் எழுதப்பட்டது அப்போதைய அரசியல் நிகழ்வுகளைத் தொட்டே இது நிகழ்ந்திருக்கும் என்றும் ஒரு சில கவிதைகள் உணர்த்துகிறது.

Continue reading “நரனின் லாகிரி (கவிதை தொகுப்பு) – நூல் அறிமுகம்”
Posted in நூல் மதிப்புரை

பூனை எழுதிய அறை | நூல் அறிமுகம்

பூனை எழுதிய அறை என்ற கவிதைத் தொகுப்பு கல்யாண்ஜி அவர்களால் எழுதப்பட்டது. இந்தக் கவிதைகளை எழுதி வெளியிட ஐந்து மாதங்கள் தாமதமாகியிருக்கிறது அதற்குக் காரணம் அதற்கு முன்னதாக அவரின் மீனைப் போல இருக்கிற மீன் கவிதைத் தொகுப்பு மிகக் குறைவாக விற்பனை ஆயிருந்த நிலையில் இனி என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, சந்தியா பதிப்பகம் அவர் மீது வைத்த நம்பிக்கை இந்த 56 கவிதைகள் நமக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையாக இருக்கிறது. நான்கு பக்கம் அடங்கிய முன்னுரையில் கூடக் கவிதை மயமாகவே தென்படுகிறது.

Continue reading “பூனை எழுதிய அறை | நூல் அறிமுகம்”
Posted in கட்டுரைகள், நூல் மதிப்புரை

அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள் | நூல் அறிமுகம்

நூல் – அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள்

ஆசிரியர் – ச. தமிழ்ச்செல்வன்

பதிப்பகம் – பாரதி புத்தகாலயம்

ஒரு நூல் வாசிப்பவனைத் தேடலில் ஆழ்த்தும். மேலும் மேலும் பல்வேறு நூல்களை வாசிக்கச் செய்யும் என்பதற்கு இந்த நூல் ஒரு சான்று, அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள் என்ற நூலை எனது நண்பன் எனக்குக் கொடுத்துச் சென்றபோது பல்வேறு கட்டுரைகளைக் கொண்ட நூலை நாமும் அவ்வப்போது ஒவ்வொரு கட்டுரையாக வாசிப்போம் என்று இருந்தேன், அண்ணே பிராங்க், மோட்டார் சைக்கிள் டைரிஸ் போன்ற நூல்களைப்போலத் தொடர் நிகழ்வாய் அல்லாமல் கட்டுரைகளாய் அமைந்திருந்த இந்த நாட்குறிப்பு மாலை நேர சிற்றுண்டி போல ஒரு சில புத்தகத்தின் இடையே படித்துக்கொண்டிருந்தேன், போகப் போகத்தான் தெரிந்தது இது நமது கொலப்பசிக்கான கறி விருந்து என.

Continue reading “அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள் | நூல் அறிமுகம்”
Posted in கட்டுரைகள், நூல் மதிப்புரை

இக்கதை தொடங்காமலே முடிகிறது | நூல் அறிமுகம்

சயன் சகோதரர்கள் எழுதிய இக்கதை தொடங்காமலே முடிகிறது நூல் வாசிக்கையில் எண்ண ஓட்டங்கள் பலவாறாகத் திரிந்து ஒரு நிலை அடைகிறது என்பேன், நிர்வாணம் என்பதை மானமெனப் பொருத்தி அதில் பெண்ணைப் புகுத்தி அவளை ஒடுக்க எல்லா வகைமைகளும் செய்யப்பட்டிருக்கிறது என்பதாலே என்னவோ இக்கதை ஒரு பெண்ணிலிருந்து தொடங்கி நிர்வாணமான ஒரு ஆணைக் கண்டு தானும் இயற்கையோடு இணையும் ஒரு சுதந்திர பறவை ஆகிறாள், இவ்விடம் சுதந்திரம் என்பது உடை, உணர்வு, உபாதைகள் என அனைத்தையும் குறிக்கிறது.

Continue reading “இக்கதை தொடங்காமலே முடிகிறது | நூல் அறிமுகம்”
Posted in நூல் மதிப்புரை

விளங்கா மெய்ம்மை – நூல் அறிமுகம்

இதுநாள் வரையில் நுண்கதை என்ற ஒன்றை நான் கேள்விப்பட்டது இல்லை, அத்தகைய ஆச்சரியத்துடன் இந்த விளங்கா மெய்ம்மை நூலை வாங்கிக்கொண்டேன், இந்த புத்தகம் 99 நுண்கதைகள் கொண்டதும் கூடவே ஓவியங்களும் கொண்டதாய் அமைந்து இருக்கிறது. வேதளம் விக்கிரமாதித்தனுக்குக் கதை சொல்வது போல ஒவ்வொரு கதையாக 99 கதைகள் சொல்லி இருக்கிறார், நுண்கதைகள் என்ற பிரிவு ஒன்று அமைகையில் இதன் எழுத்தாளர்கள் நிச்சயம் அடையாளப்படுத்தப் படும்படியான இடத்தினை பிடிப்பார்கள் என்ற அழகியல் இதில் உள்ளது.

Continue reading “விளங்கா மெய்ம்மை – நூல் அறிமுகம்”
Posted in நூல் மதிப்புரை

மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் – மம்மூட்டி | நூல் அறிமுகம்

பொதுவாகப் பிரபலங்களின் செயல்கள் என்பது நம் சமூகத்தில் பெரும் ஈர்ப்பைப் பெறக்கூடியவை அதிலும் திரைத்துறை நடிகர்கள் அவர்கள் சார்ந்த விடயங்கள் என்றால் இன்னும் கூடுதல் ஈர்ப்புப் பெறுகிறது. ஆனால் வாசிப்பில் அப்படி இருபதாக நான் கருதவில்லை, இருப்பினும் பிடித்த நடிகரின் புத்தகம் என்றால் ஒரு ஈர்ப்பு வரலாம், அப்படி அதீத எதிர்பார்ப்புகளுடன் வாசிக்கப்படும் பிரபலங்களைப்பற்றிய புத்தகங்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு ஏமாற்றத்தைத் தந்துவிடுகிறது.

Continue reading “மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் – மம்மூட்டி | நூல் அறிமுகம்”
Posted in நூல் மதிப்புரை

‘கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்’ ஆதிவாசி கவிதை – நூல் அறிமுகம்

இன்று வளர்ச்சியின் பெயரால் நெருக்கடிகளை உச்சரித்துக் கொண்டு ஊடுருவும் நாகரிக வெளிச்சத்தில் கண்கூசி முகம் பொத்திக் கொள்கிறது ஆதிவாசிகளின் பண்பாடு. அடையாளங்களை தொலைத்துவிடும் அபாயத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மொழிக்குக் கீழே இருக்கும் சுரங்க அறைக்குள் தஞ்சம் புகுந்து கொள்கின்றன. இவர்களது தொன்மங்கள். மூதாதையர்களின் ஆவிகளோடு சடங்கியல் ரீதியாக உரையாடிக்கொண்டு காலம் என்பதைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் ஆதிவாசிகளின் வாழ்க்கை அவர்களது பூர்வீகமான காடுகளிலிருந்தும், மலைகளிலிருந்தும் விரட்டி அடிக்கப்படுகிறது.

Continue reading “‘கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்’ ஆதிவாசி கவிதை – நூல் அறிமுகம்”