Posted in கட்டுரைகள்

என் ஆசை கள்ளி!

FB_IMG_1452591503435

கிடச்ச வேலையும் போச்சு! இப்போ என்ன செய்யறதுன்னு தெரியல என்றவாறே புலம்பிக்கொண்டிருந்தான் அவன், அந்த உயர்தர காப்பி ஷாப்பில்.

நடு வகிடு எடுத்து வாறிய தலை, பௌர்ணமி நிலவு போல வட்டமான பொட்டு, அமிர்தத்தினும் இனிமையான புன்னகையுடன் தோன்றியது அவளின் முகம் படி ஏறி மேலே வரும்போது.

Continue reading “என் ஆசை கள்ளி!”
Posted in கட்டுரைகள்

தந்தையும் ஓர் தாயே

dad-and-sonபொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு சென்றிருந்தான் அவன், எப்போதும் இல்லாத மகிழ்ச்சி இந்த முறை ..

அவனுக்கே நம்பிக்கை இல்லை இது கனவா நிகழ்வா என்று..

தம்பி வேலை எப்படி போகுதுப்பா என்றார்  அன்போட அவன் தந்தை.

உள்ளே பல கஷ்டங்கள் இருப்பினும் பல மையில் தூரம் சென்று வேலை பார்க்கும் மகன் கஷ்ட படுகிறான் என்றால் அவர் மனம் புன்படுமென்று

நல்லா போகுதுப்பா என்றான்.

ஆபீஸ்ல எல்லாம் நல்லா பலகுராங்கலாப்பா வேல பிடிசுருகுக்காப்பா??

அதுலா சூப்பர் அப்பானு சொல்லிட்டு தோட்டத்திற்குள் நகர்ந்தான்.

பசுமை பொங்கும் காடு அதில் கொஞ்சி குலவும் குயில்களின் சத்தம் அவன் காதுகளில் தேனை வார்த்தது , தென்றல் காற்று அவன் தலையை மெதுவாய் கோதிவிட அவன் மனதில் இங்கேயே இருந்து தோட்டத்துல வேலை பாத்துகிட்டே அப்பா அம்மா கூட சந்தோசமா இருந்திடலாம்னு ஒரு எண்ணம்.

இத்தனை இன்பம் இங்கிருக்கும் போது நான் ஏன் எல்லோரையும் விட்டிட்டு போய் இந்த காந்தி படம் போட்ட காகிததுக்காக அங்க இருக்கனும், அத இங்கேயே இருந்து சம்பாரிச்சிடலாமே, ஆனா என்ன செய்ய நாம படிச்சு முட்டாளாகி இன்னொருதன்ட்ட அடிமையா இருக்கோம்னு அவன் தனக்கு தானே பேசிட்டு இருக்கும் போது “தம்பி என்று வீட்டிலிருந்து சத்தமாக அழைத்தாள் அவள் அம்மா..

இதோ வரேன் மா என்று சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தான்.

வந்தும் வராம என்னடா தோட்டத்துல வேல, வாடா சாப்பிடலாம் என்றாள்

அன்று அவன் வீட்டில் நாட்டுகோழி கறி, அவன் கறி சாப்பிட மாட்டான் என்பதால் அளவாக செய்திருந்தாள் அவள் அம்மா.

ஊர்ல இருக்க பசங்கள பாரு கறி கறினு ஆசையா இருக்கானுங்க, இருந்திருந்து என் வைத்துல வந்து பிறந்துட்டு கறி வேண்டா முட்ட வேண்டான்ட்டு இருக்கான் என்று அவன் கறி சாப்பிடாத வருத்தத்தில் திட்டி கொண்டிருந்தாள் .

அம்மாவை கொஞ்சி கொண்டே, அம்மா இப்போ கொஞ்ச கொஞ்சமா கறி சாப்பிட்டு பழகிட்டு இருக்கேன் எனக்கு கொஞ்சமா வைமா என்று தலை வாழை இழையை விரித்தான்..

(வாரம் ஒரு முறை கறி உண்ண ஆசை இருக்கும் போதிலும் மாதாந்திர குடும்ப செலவுகளை குறைக்க திருவிழா சமயங்களில் மட்டும் கறி உண்பவர்கள்  அவன் பெற்றோர்.)

அவன் அருகிலிருந்த அவன் அப்பா எனக்கு கறி வேண்டாம் வெறும் குழம்பு மட்டும் ஊத்து போதும் என்றார்.

ஏன் அப்பா கறி சாப்பிடலையா என்றான்

இல்லப்பா வயிறு சரி இல்ல நீ நல்லா சாப்பிடு என்று சொல்லிவிட்டு குழம்பில் தன் உணவை முடித்து கொண்டார்.

கை அலம்பிக்கொண்டிருந்த அவரிடம் அவன் அம்மா கேட்டாள் ஏன் கொஞ்சமா சாப்பிட வேண்டி தான

இல்ல அவன் சாப்பிடட்டும் என்றார்

அவன் எவ்வளவு சாப்பிடபோரான் சும்மா ரெண்டு துண்டு அவ்ளோ தான்  என்றால் அவன் அம்மா

இல்ல இப்போ ரெண்டு துண்டு அப்புறம் இரவு ரெண்டு துண்டு சாப்பிடட்டும் என்றவாரே தோட்டத்திற்குள் சென்றார் அவன் தந்தை.

இதை கேட்ட அவன் கண்களில் கண்ணீர் ததும்ப , இமைகளில் அணைகட்டி தடுத்து விட்டு அம்மா நீ சாப்பிடுமா என்று சொல்லிவிட்டு தந்தையை தேடி தோட்டத்திற்குள் சென்றான்.

அங்கே தன் மகன் கறி உண்ட மகிழ்ச்சியில் மாடுகளை பராமரித்து கொண்டிருந்தார் அவன் தந்தை.

ஒவ்வொரு தந்தையிடத்திலும் இது போன்ற தாய்மை உள்ளது என்றவாறே, தன் தந்தையை பார்த்து பெருமிதம் கொண்டிருந்தான் அவன்.

 

– குமரேசன் செல்வராஜ்