2020 வல்லரசை நோக்கிய பயணம்!

வாழ்வின் இறுதி மூச்சுவரை இளைங்கனுக்காக வாழ்ந்த மனிதனுக்கு நான் செய்யும் வெகுமானம் என்ன. இதோ என்னால் முடிந்த ஒரு பயணம் இந்தியா 2020 வல்லரசை நோக்கி. ஐயா அப்துல் கலாம் அவர்களின்கனவுகளை நினைவாக்கும் முயற்சியில் என் தோழர்களுடன் என் பள்ளியின் சுற்று வட்டாரத்தில் 100 மரம்நடும் பணி தொடங்கினோம், அத்தோடு அங்குள்ள மாணவர்களுக்கும் மரம் வழங்கி அதனைத் தொடர்ந்துஅவர்களையும் அப்துல் கலாமின் கனவுகளை நோக்கிப் பயணிக்க அவர்கள் மனதில் ஒரு உந்து சக்தியைஅமைத்தோம். உலகையே உலுக்கி இதுதான் இந்தியா இது தான் தமிழின் பெருமை என்று உலகிற்குஉணர்த்திய மனிதா உன் செயலுக்கு எந்த ஒரு சொல்லும் மிகையாகாது எனவே எங்கள் செயல்களின்ம மூலம்  உனக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.   Advertisements

நான் பட்ட அவமானம்! அதற்கான வெகுமானமும்!

பரபரப்பான உக்கடம் பேருந்து நிலையம் வந்து இறங்கினேன். முதுகலைப்பட்டம் இறுதி ஆண்டு இது. இரு மாதங்களே உள்ளது என் வாழ்க்கையின் துடக்கதிற்கு என்று என் மனதில் நிறைய சிந்தனைகளுடன் கல்லூரியிலிருந்து இங்கு வந்துசேர்ந்தேன் என் சொந்த ஊருக்கு செல்வதற்காக.  சிங்காநல்லூர் செல்லும் பேருந்தில் ஏறி கடைசி இருக்கையில் அமர்ந்தேன். பேருந்து புறப்பட நடத்துனரிடம் பத்து ரூபாயை கொடுத்து பயண சீட்டு கேட்டேன் அவரும் சில்லறைக்கு கடிந்து கொண்டு சீட்டை கொடுத்தார். பேருந்து ஊர்ந்து வெளியே வந்தது. எண்ணெய் … More நான் பட்ட அவமானம்! அதற்கான வெகுமானமும்!