நான் காதலிக்கிறேன்!

  இடை இடையே உன் முகம் காட்டு இல்லையேல் வாடிடுவேன் வறட்சியிலே! மடல் அட்டையோடு காத்திருப்போர் போல நானும் மரக்கன்றுகளோடு! என் உடலெங்கும் மழையாய் முத்தமிடு நாம் இணையும் இன்பத்தின் உச்சம் அது! இதழோடு இதழ் இணைவதைப் போல மண்ணோடு நீ இணைந்துவிடு! ஏர் உழுத எம் நிலக் கரங்களின் விரல் இடையில் நீராய் உன் விரல்களை கோர்த்திடு! வறண்டோடும் எம் ஆறுகளிடம் நீயும் புரண்டோடி புணர்ந்திரு! களவு முடிந்து விலகிடுவானோ – ஐயம் வேண்டாம் உழவு…

களம் கண்ட காளைகளே

களம் கண்ட காளைகளே விமர்சனங்களும் எதிர்வாதங்களும் உங்களைத் தாக்கினாலும் – உங்கள் உத்வேகம் ஒருபோதும் குறையாது! உனராமல் உம்மை தூற்றுவோரும் அறிவார் ஓர்நாள் உமது உன்மைப் போராட்டத்தை! உடனிருப்போரும் உதாசிக்கலாம் – ஏனோ அவர்களும் உங்களை உனரவில்லை! மன்னித்திடுவாய் அவர்களையும் நீ காலம் அவர்களையும் உனரப்படுத்தும்! உன் வாழ்வில் பல அங்கத்தை பலர் உரிமைக்காக உழைத்தாய்! என்னற்ற எளியவரின் எதிர்காலம் காத்தாய்! எத்துனையோ களம் கன்ட உமக்கு இவைகள் ஒருபோதும் தடைக்கல்லாகாது உனர்வுடனும் உன்மையுடனும் உன்னுடனிருந்த பெருமை…

உண்மையில் வதைத்தவன் அவனா!

ஏறு முடித்து அறுப்பு கண்ட என் தகப்பன்! என்னைத் தழுவி விளையாடி என் பெருமை எடுத்துரைத்தான் உலகிற்கு ! தழுவி தழுவி பாசமும்., தனித்து நிற்கும் ரோஷமும்., என்னுள் எனக்கானதாய் கொடுத்தான்! பாசம் கண்ட பொறாமையில் மோசம் செய்ய தொடங்கியது ஒரு கூட்டம்! உயர்ந்த திமிலை உடைக்க ஓர் திட்டம்! வியாபார பெருக்கே அவர்கள் நாட்டம்! கட்டுங்கடங்காமல்  தாவி வரும்  வாடிவாசலை பூட்டி வைக்க போட்டான் சட்டம்! தழுவிய பாசம் என்னை வதைக்கிறது என்றாயே உண்மையில் வதைத்தவன்…

காகித கப்பலும் கட்டுமரமாகும்!

சமூகம் என்னும் சமுத்திரத்தில் வேலை என்னும் முத்தை தேட… படித்த பட்டத்தில் காகித கப்பல் செய்து முயற்சி என்னும் துடுப்பை போட்டேன் காலம் என்ற காற்று புயலாய் தாக்க குழப்பம் என்னும் சுழல் என்னை சாய்க்க திறமை என்னும் மைத்துனன் வலுவில் காகித கப்பலும் கட்டுமரமானது தேடிய முத்தும் கையை எட்டியது வெற்றி என்னும் கரையும் என்னை ஈர்த்தது!

புள்ளி

புவியின் உருவம் நான்! பிறப்பின் அர்த்தம் நான்! தொடக்கத்தின் முடிவு நான்! முடிவின் தொடக்கம் நான்! உயிரின் உரிமை நான்! உலகின் உண்மை நான்! உலகம் அறியா மர்மம் நான்! பிரிவின் சக்தி நான்! பிரிந்தபின் தொடர்வின் யுக்தி நான்! புரியும் புக்தி நான்! புரிய புதிரும் நான்! மனிதா உன் தொடக்கமும் நான் முடிவும் நான்! – குமரேசன் செல்வராஜ்  

மறந்துவிடாதே அவனும் உன் சகோதரனே!

ஆழ்கடலில் கிடக்கும் கல்லையும் கண்டறிய கண்டோம்! நிலவிலிருந்து மண்ணும் எடுக்க கண்டோம்! மறைந்த மாபெரும் உருவம் எங்கே! தேடி அதனை கண்டறிய காணோம்! மறந்த நிலையில் மனிதர்களானோம்! தலைப்புச் செய்தியாய் தவித்ததெங்கே? தரணியெங்கும் படித்த தாளாய் வீசிஎரிந்ததெங்கே? மாந்தர்கள் மலைப்பு கொண்டு மறந்தும் போயினர்! மாண்டது அதிலே மனிதர்கள் தானே! மறந்து விடாதே அவனும் உன் சகோதரனே! -குமரேசன் செல்வராஜ்  

Where is the HUGE VULTURE gone.

Easy to found a stone in deep sea! Easy to take a sand from moon! Where is the huge Vulture Gone? Way to found that are none! Forgetting is the identity of men! Headlines are scrolled Damn! Left in that are Human Souls! Don’t Forget. That the Souls will be your Brotherhoods! -குமரேசன் செல்வராஜ்  

ஊரெங்கும் ஓட்டு!

 காலையின் உதயத்தில் – பனித்துளி படர்ந்த இலைகளிடையே மலர்ந்த மலர்கொண்டு – அனைக்கும் புலனுடன் கருதருக்கும் கருவியாம் என நான்கால் உயர்நின்று இதழிக்கின்றனர் எங்கும் விழித்திடவில்லை – செவிச்செல்வர் எவரும் (என்னோடு ஓ) என்னும் உரிமைக்கு! -குமரேசன் செல்வராஜ்