எம் கவிச்சோலையில் உனக்கென ஓர் பூங்கொத்து!

இதழ் விரித்து முகஞ்சிரிக்க

பூவாய் மலரும் கன்னக்குழியழகி நீ!

ஓரப்பார்வை பார்க்கையிலே

உருண்டோடும்

கோழிக்குண்டு கண்ணழகி நீ!

வளைந்து நெளிந்த

உன் புகைப்படம்

மழை நேர வண்ண மயில் ஆட்டம்!

எம் கவிச்சோலையில்

உனக்கென ஓர் பூங்கொத்து

பொறுமை காத்துக் கேளடி!

கடைக்கண் பார்வை அழகு!

கன்னக்குழி அழகு!

முட்டை கண்கள் அழகு!

ஒய்யார நடை அழகு

ஓயாத பேச்சு அழகு!

தலை கவிழ்ந்து வெட்கம் அழகு! – பார்த்ததில்லை நான்

காத்திருக்கிறேன் கண்கொண்டு காண!

பூமகளே நீ வாடும் நேரமெல்லாம்

நீர் தெளிக்க நான் இருப்பேன்!

மதியழகே நீ மெலிந்தால்

மணியடிக்கட்டும் என் கைபேசி

மனமகிழ்விக்க  நான் இருப்பேன்!

மேகம் பிழிந்து

இவள் தாகம் தணிப்பாள் !

கோடை தழல் போக்க

குடை நிழல் தருவாள்!

இத்’தரு’மகள் குளிரும்படி

கவிதை தூவினேன் கேளடி!

– குமரேசன் செல்வராஜ் 

Advertisements

நீ என்றும் எனக்கு விந்தையானவனே!

Dadவெறும் கல்லாய் இருந்த என்னை கலைப்பொருளாய் மாற்றிய சிற்பியின் உளியே!

சிறகொடிந்து விழுந்த போதெல்லாம் சிகரம் தொட தூண்டிய உந்துகோல் நீ!

சிரிக்கும் என் முகம் பார்க்க சிவந்த கைகளையும் கண்களையும் மறைத்த மனமே!

என் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்த பூரிப்பில் உன் தியாகம் மறைத்தவன் நீ!

நான் மலர்ந்த மலராய் மணம் வீசும் பொது மனம் நெகிழ்ந்த மன்னவனே!

இவ்வுயிர் உன்னால்!

இப்பிறவி உன்னால்!

இவ்வாழ்க்கை உன்னால்!

என்ன சொல்லியும் மிகைபடுத்த முடியவில்லை என்னால்!

என்றும் என் பாதை உன் வழிகாட்டலின் பின்னால்!

என் தந்தையே!

நீ என்றும் எனக்கு விந்தையானவனே!

– குமரேசன் செல்வராஜ்

 

முட்டாளனேன் அக்கணம்!

3a112151e31cd9d4b45b4cf4e844a327-d36fgkoஇரவின் மடியில் உறங்க முடியாமல் தவிக்கிறேன்

உன் மடியில் சாய்ந்த நினைவுகளோடு!

என் இரவின் இருள் அனைத்தையும்

உன் கூந்தலாய் கண்டேன் இனிமையில் …

இன்றோ ஏங்கிக் கிடக்கிறேன் எனக்கான

இருளைத்தேடி தனிமையில்!

கானல் நீரில் மீன்கள் ஏது, என கேலி செய்கிறது

நாம் அமர்திருந்த நதிக்கரைகள்!

முள்ளாக குத்திச் சென்று முட்டாளாக்கியது

அன்று நம்மை தீண்டிய தென்றல்!

தினங்களில் இல்லை முட்டாள் தனம்

உன் நினைவை மறக்க மறுத்த என் மனம்

அதுவே என்னை மாற்றியது அக்கணம்!

– குமரேசன் செல்வராஜ்

 

காத்திருப்பு!

Sad-alone-boy-shayari

உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும்

உன் நினைவலைகள் என் மனதில் ஓடிட

அவை அனைத்தும் என் கண்முன்னே தோன்றிட

பாலைவனத்தில் கானல்நீரை கண்டதுபோல

இதழின் ஓரமாய் சிறு புன்னகை மலரும் என்னையும் அறியாமல்…

– குமரேசன் செல்வராஜ் 

 

நட்பு ஒன்றே போதுமானது!

1311787-mediumகாத்திருப்பது காதலுக்கு மட்டும் சுகமல்ல

நட்புக்கும்தான் என்பதை உணர்தேன் உன் அன்பில்..

காலம் கடந்து கால்கள் கடுத்த போதிலும்

நகராமல் காத்திருக்க காரணம் ஏதுமில்லை

உன்னை காண்பதை தவிர..

காதலும் இவ்வளுவு சுவாரஸ்யமானதாக இருக்குமா என்று தெரியவில்லை!

காவியமேதும் இதனை பாடவில்லை!

நட்புக்கென்று இலக்கனம் ஏதும் இல்லை!

என்பதாலே நானும் யோசிக்கவில்லை எதையும்

உன் நட்பை தவிற வேறேதும் வேண்டியதில்லை எனக்கும்.

-குமரேசன் செல்வராஜ் 

 

முதலும் முடிவும்!

என் முதல் காதல் உன்னிடத்தில் தான் !

என் முதல் முத்தம் உன்னிடத்தில் தான் !

என் முதல் தீண்டலும் உன்னிடத்தில் தான்!

காதலும் கனிந்தது,

கவிதைகளும் மலர்ந்தது,

முத்தங்களும் கசிந்தது,

தீண்டலும் சிவந்தது,

தண்ணீர் தேசத்தில் தவிழ்ந்ததும்

கண்ணீர் விட்டு கதறியதும் உன்னால் தான்!

காதலென்னும் சமுத்திரம்

கானல் நீராய் போனது,

உதடுகள் வறண்டது,

முதல் காதல் அது முடிந்து போனதா?

மொத்தமாய் என்னை கொன்று தின்றதா?

என்றும் என் முதலும் முடிவும் உன் காதல் தான்

– குமரேசன் செல்வராஜ் 

 

உன் முன்னே! என் கண்ணே!

tumblr_nq3a0iw1wH1takhpwo1_500

ஆசை அனைத்தும் அவள் கண்களில் கண்டேன்

அடையா ஆசையாய் இருப்பினும்

ஆசை கொண்டாய், உனக்காக அல்ல

எனக்காக!

காதலின் சுவையை தந்தவளே

கனிரசமும் இனித்ததில்லை இது போன்று!

அமிர்தமே ஆயினும் உன் சிரிப்புக்கும், சினுங்களுக்கும்

ஈடாகுமா!

பல்லாயிரம் சுமைகள் சுமந்து, அயராது தடைகளை உடைத்து

வலியோடும், சோர்வோடும் வந்ததென்னவோ

உன்னை காணத்தானே என் அன்பே!

அறுபது வயதே ஆயினும் ஆறு வயது சிறுவனாக மாறினேன்

உன் முன்னே என் கண்ணே!

– குமரேசன் செல்வராஜ்