நான் காதலிக்கிறேன்!

 

Water Roseஇடை இடையே உன் முகம் காட்டு

இல்லையேல் வாடிடுவேன் வறட்சியிலே!

மடல் அட்டையோடு காத்திருப்போர் போல

நானும் மரக்கன்றுகளோடு!

என் உடலெங்கும் மழையாய் முத்தமிடு

நாம் இணையும் இன்பத்தின் உச்சம் அது!

இதழோடு இதழ் இணைவதைப் போல

மண்ணோடு நீ இணைந்துவிடு!

ஏர் உழுத எம் நிலக் கரங்களின் விரல் இடையில்

நீராய் உன் விரல்களை கோர்த்திடு!

வறண்டோடும் எம் ஆறுகளிடம் நீயும்

புரண்டோடி புணர்ந்திரு!

களவு முடிந்து விலகிடுவானோ – ஐயம் வேண்டாம்

உழவு என்றும் எந்தன் உயிரில் கலந்தது!

மோகம் முடிந்தபின் விலகினாலும்

தாகம் எனும்போது தயங்காமல் தீர்த்துவிடு!

தையிலே கரம்பிடிக்க விளைச்சளோடு காத்திருப்பேன்

ஐய்ப்பசியில் விட்டுச்சென்றால் மார்கழியில் மாண்டிடுவேன்!

கன்னியரை காதலிக்கும் காளையர்  மத்தியில்

நானோ தண்ணீரைக் காதலிக்கிறேன்!

– குமரேசன் செல்வராஜ் 

களம் கண்ட காளைகளே

hiphop-aadhi

களம் கண்ட காளைகளே

விமர்சனங்களும் எதிர்வாதங்களும்

உங்களைத் தாக்கினாலும் – உங்கள்

உத்வேகம் ஒருபோதும் குறையாது!

உனராமல் உம்மை தூற்றுவோரும்

அறிவார் ஓர்நாள் உமது உன்மைப் போராட்டத்தை!

உடனிருப்போரும் உதாசிக்கலாம் – ஏனோ

அவர்களும் உங்களை உனரவில்லை!

மன்னித்திடுவாய் அவர்களையும் நீ

காலம் அவர்களையும் உனரப்படுத்தும்!

உன் வாழ்வில் பல அங்கத்தை பலர்

உரிமைக்காக உழைத்தாய்!

என்னற்ற எளியவரின் எதிர்காலம் காத்தாய்!

எத்துனையோ களம் கன்ட உமக்கு

இவைகள் ஒருபோதும் தடைக்கல்லாகாது

உனர்வுடனும் உன்மையுடனும் உன்னுடனிருந்த

பெருமை எனக்கு!

காளை காத்து வரும் சந்ததி காக்க போராடியவனே

என்றும் கடமைப்பட்டிறுக்கிறேன் உமக்கு!

வாய்ச்சொல்லில் நன்றி கூறி முடிக்க மனமில்லை!

தொடர்கிறேன் உன்னோடு!

                          -குமரேசன் செல்வராஜ்

உண்மையில் வதைத்தவன் அவனா!

12615552_1058116447564119_2995115981253802456_oஏறு முடித்து அறுப்பு கண்ட

என் தகப்பன்!

என்னைத் தழுவி விளையாடி

என் பெருமை எடுத்துரைத்தான்

உலகிற்கு !

தழுவி தழுவி பாசமும்.,

தனித்து நிற்கும் ரோஷமும்.,

என்னுள் எனக்கானதாய் கொடுத்தான்!

பாசம் கண்ட பொறாமையில்

மோசம் செய்ய தொடங்கியது ஒரு கூட்டம்!

உயர்ந்த திமிலை உடைக்க ஓர் திட்டம்!

வியாபார பெருக்கே அவர்கள் நாட்டம்!

கட்டுங்கடங்காமல்  தாவி வரும்  வாடிவாசலை

பூட்டி வைக்க போட்டான் சட்டம்!

தழுவிய பாசம் என்னை வதைக்கிறது என்றாயே

உண்மையில் வதைத்தவன் அவனா!

முற்போக்கு மூடனே!

என்னை மாமிசமாய் பார்க்கும் மத்தியில்

மகனாய் பேணிக்காப்பானே

என் அப்பன்!

உண்மையில் என்னை காக்கும் நோக்கம்14322586_1663823420600923_8512302336628138863_n

உன்னதென்றால்!

இறைசிக்கடைக்கு பூட்டுப்போடு!

ஜல்லிகட்டுக்கு விடை கொடு !

– குமரேசன் செல்வராஜ்

 

நீ என்றும் எனக்கு விந்தையானவனே!

Dadவெறும் கல்லாய் இருந்த என்னை கலைப்பொருளாய் மாற்றிய சிற்பியின் உளியே!

சிறகொடிந்து விழுந்த போதெல்லாம் சிகரம் தொட தூண்டிய உந்துகோல் நீ!

சிரிக்கும் என் முகம் பார்க்க சிவந்த கைகளையும் கண்களையும் மறைத்த மனமே!

என் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்த பூரிப்பில் உன் தியாகம் மறைத்தவன் நீ!

நான் மலர்ந்த மலராய் மணம் வீசும் பொது மனம் நெகிழ்ந்த மன்னவனே!

இவ்வுயிர் உன்னால்!

இப்பிறவி உன்னால்!

இவ்வாழ்க்கை உன்னால்!

என்ன சொல்லியும் மிகைபடுத்த முடியவில்லை என்னால்!

என்றும் என் பாதை உன் வழிகாட்டலின் பின்னால்!

என் தந்தையே!

நீ என்றும் எனக்கு விந்தையானவனே!

– குமரேசன் செல்வராஜ்

 

காகித கப்பலும் கட்டுமரமாகும்!

Jumpசமூகம் என்னும் சமுத்திரத்தில்

வேலை என்னும் முத்தை தேட…

படித்த பட்டத்தில் காகித கப்பல் செய்து

முயற்சி என்னும் துடுப்பை போட்டேன்

காலம் என்ற காற்று புயலாய் தாக்க

குழப்பம் என்னும் சுழல் என்னை சாய்க்க

திறமை என்னும் மைத்துனன் வலுவில்

காகித கப்பலும் கட்டுமரமானது

தேடிய முத்தும் கையை எட்டியது

வெற்றி என்னும் கரையும் என்னை ஈர்த்தது!

signature

முட்டாளனேன் அக்கணம்!

3a112151e31cd9d4b45b4cf4e844a327-d36fgkoஇரவின் மடியில் உறங்க முடியாமல் தவிக்கிறேன்

உன் மடியில் சாய்ந்த நினைவுகளோடு!

என் இரவின் இருள் அனைத்தையும்

உன் கூந்தலாய் கண்டேன் இனிமையில் …

இன்றோ ஏங்கிக் கிடக்கிறேன் எனக்கான

இருளைத்தேடி தனிமையில்!

கானல் நீரில் மீன்கள் ஏது, என கேலி செய்கிறது

நாம் அமர்திருந்த நதிக்கரைகள்!

முள்ளாக குத்திச் சென்று முட்டாளாக்கியது

அன்று நம்மை தீண்டிய தென்றல்!

தினங்களில் இல்லை முட்டாள் தனம்

உன் நினைவை மறக்க மறுத்த என் மனம்

அதுவே என்னை மாற்றியது அக்கணம்!

– குமரேசன் செல்வராஜ்

 

காத்திருப்பு!

Sad-alone-boy-shayari

உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும்

உன் நினைவலைகள் என் மனதில் ஓடிட

அவை அனைத்தும் என் கண்முன்னே தோன்றிட

பாலைவனத்தில் கானல்நீரை கண்டதுபோல

இதழின் ஓரமாய் சிறு புன்னகை மலரும் என்னையும் அறியாமல்…

– குமரேசன் செல்வராஜ்