பெண்_ஒரு_மகாசக்தி…!!

12046942_999760826751478_4226060199130653985_n

எல்லா பெற்றோரும்.. தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில்.. கட்டிக் கொடுக்க வேண்டும் என்ன கனவு நியாயமான ஒன்று தான்..!!அவளுடைய பெற்றோரும்… அப்படி தான்.. மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!!படித்த மாப்பிள்ளை.. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன்.. இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!!

உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!!இருவரும் தினமும் அலைபேசியில்.. பேசத் தொடங்கினர்..!!திருமண நாள்.. நெருங்க,, நெருங்க.. அவள் வீட்டில் ஒரே பதட்டம்..!! வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது..!! இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..!!

நாளை திருமண நாள்…அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது..!! வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது..!!தினமும் அவருடன்.. பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்க வில்லை..!!ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப் போகிறோம்.. என்று அவள் மனம் பரிதவித்தது..!! தந்தையையும்,, தாயையும் பார்த்தாள்.. எல்லோரும் வேலையாய் இருந்தனர்..!!

அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்..!! விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள்.. கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில்.. நீர் துளி சொட்டியது..!!அங்கே.. தங்கையின் புது துணி பரவசத்தில் “அக்கா”… என ஓடி வந்தாள்..!!அவளை பார்த்ததும்.. ” என்னாச்சுக்கா..?”என்றாள்..!!பூ வாங்கினால் கூட.. சரிசமமாக.. வெட்ட சொல்லி சண்டை போடும் நான்.. இனி யாருடன் சண்டை போடுவேன்..?? இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு.. நான் செல்ல போகிறேனே.. என விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே எண்ணினாள்..!!

“அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கே போன..??” என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள்.. அவளை வளர்த்தவள்.. !! அம்மாவை அடிக்கடி திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..??அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்..!!அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்..!!அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து.. ” அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா..!!”” என்றார்..!!

“நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன்.. நீ என் செல்லம் டா..” என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்..!!எச்சிலையும்,, சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு.. அம்மாவை அழைத்து விட்டு.. வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்..!!எங்கிருந்தோ குரல்.. “அடியே உள்ள போ.. கறுத்து போக போற.. நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு.. வெளியே வந்து உட்காராத.. !!” பாட்டியின் குரல் தான் அது..!!எப்போதும் எதையாவது.. சொல்லிக் கொண்டிருக்கும்.. பாட்டியின் பேச்சை கேட்காமல் முறைப்பாள்..!!ஆனால் இப்போது முறைக்க தோனவில்லை.. முகம் அப்படியே அழுவது போல.. பொங்கியது.. ” என்னாச்சுடி என் ராசாத்தி..” பாட்டி அருகில் வந்து கேட்டவுன்.. அதற்கு மேல் முடியவில்லை.. வீட்டிற்குள் ஓடி சென்று.. கத்தி அழுதாள்.. !!

எல்லோரும் பயந்து கொண்டு ஓடி வந்தனர்.. அவள் அம்மாவிடம் ” அம்மா நான் இங்கேயே இருந்து விடுகிறேன்.. உங்களை விட்டு நான் எப்படி செல்வேன்.. அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது..!!” என்று அழுதாள்..!!உடனே அப்பாவின் மனம் அழுதது.. அம்மா சமாதானம் செய்தாள்..!!அப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும்.. அப்பாவிற்கும்,, மகளுக்கும் உள்ள பாசம்.. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..!!தங்கை குலுங்கி,, குலுங்கி அழுதாள்.. ” அழாதே அக்கா மாமா உன்ன நல்லா பாத்துப்பாரு கா..”! என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்..!!

அன்று இரவு…அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா..!!ஆனால் அவள் மனம் புண்பட்டு போய் இருந்தாள்..! நாளை திருமணம்.. போகும் இடம் சொர்க்கமோ இல்லையோ.. என்றெல்லாம்.. தெரியாது… ஆனால் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும்.. அவள் செல்ல போகிறாள்.. என்பது தெரிந்தது..!!

ஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு..!!ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்..!! அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து.. வேரோடு பிடுங்கி எடுத்து.. மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா.. தான் பெண்ணின் திருமணம்..!!அதில் துளிர்ந்த பெண்களும் உள்ளனர்…பட்டுப் போன பெண்களும் உள்ளனர்..!!

#‎பெண்_ஒரு_மகாசக்தி…!!

Advertisements

‘எனது மகளின் புதிய குடும்பத்தினரே…!’- ஒரு தந்தையின் உருக்கமான உரை

marriage couple 550 2

பெண்களுக்கு மட்டுமே இது நடக்கிறது. பிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு. ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தகைய இடம்பெயரும் தருணம் உணர்வுப்பூர்வமானது. அந்தவேளையில், பெண்ணைவிட பெண்ணைப் பெற்றவர்களுக்கு குறிப்பாக தந்தைக்கு நேரும் உணர்வுப் போராட்டம் சொற்களில் அடங்காதது.

அவ்வாறாக உணர்ச்சிவசப்பட்ட ஒரு தந்தை, தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரையை ஃபேஸ்புக் பகிர்வில் படிக்க நேர்ந்தது.

மிகவும் உருக்கமான, யதார்த்தமான, இயல்பான அந்த பதிவு இதோ…

“இந்த உரையை, ‘எனது மகளின் புதிய குடும்பத்தினரே’ என்று உங்களை வரவேற்று ஆரம்பிக்க வேண்டும் என்றே நினைத்தேன். ஆனால், அது பொருத்தமாக இருக்காது என்பதால் கடைசி நிமிடத்தில் அதை தவிர்த்துவிட்டேன். அவள் எப்போது திருமண பந்தத்தில் இணைந்தாளோ அப்பொழுதே உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவளாகிவிட்டாள். அதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவள் உங்கள் குடும்பத்தினருக்கே எப்போதும், எதிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். இனி, இளைப்பாற விரும்புகிறோம். அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம். ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். நான் எதிர்பார்ப்பதைவிட நீங்கள் அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததைவிட, உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளளோடு இருப்பாள் என நம்புகிறேன். இருந்தாலும், எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை திரும்பத் திரும்ப சொல்கிறேன், ‘தயவுசெய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!’

அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன். ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே. இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன். ஏனென்றால் அது ஓர் இயற்கை நியதியாக இருக்கிறது. கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டு மட்டுமே அவளை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கிறேன்.

marriage couple 550 1(1)என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது. எனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் தருகிறேன். அந்த உலகம் என்றென்றைக்கும் அழகாக இருப்பதை நீங்களே உறுதி செய்ய வேண்டும். எனது இளவரசியை உங்களிடம் அனுப்புகிறேன். அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ வழிவகை செய்யுங்கள். எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது. இப்போது அவள் மாசறு பொன்னாக இருக்கிறாள்.

அவள் உங்கள் வீட்டுக்கு கொண்டு வரும் அன்பு, அக்கறை, அரவணைப்பு, அழகு, இதம் என எல்லாப் பண்புகளுக்கும் பரிசாக அவளுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள். ஆம், அவளை தயவுசெய்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள். எப்போதாவது அவள் சிறு தவறு செய்துவிட்டாள் என நினைத்தால் அவளை தாராளமாக திட்டுங்கள். ஆனால் அதேவேளையில், அவள் மேல் செலுத்தும் அன்பில் குறைவைக்காதீர்கள். அவள் மிகவும் நளினமானவள். அவள் எப்போதாவது துவண்டு போய் இருந்தால் அவளுடன் இருங்கள். உங்களது சிறு கவனம் அவளுக்கு போதும், ஆறுதல் தர.

அவள் உடல்நலன் பாதிக்கப்பட்டால் அவள் மீது அக்கறை காட்டுங்கள். அதுவே அவளுக்கு அருமருந்து. அவளது பொறுப்புகளில் எப்போதாவது விலகிவிட்டால் அதைச் சுட்டிக்காட்டுங்கள். அதேவேளையில், ‘நீ இன்னும் வாழ்க்கையை கற்றுக் கொண்டிருக்கிறாய் என நாங்கள் நம்புகிறோம்’ என அவள் உணரும்படி நடந்து கொள்ளுங்கள். அவளைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அவளை மாதக் கணக்கில் காண முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, அவள் குரலை தினம் தினம் கேட்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டுக்கு வந்தபிறகு அவளுக்கு என் நினைவே வரவில்லை என்றால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். என் மகளின் மகிழ்ச்சி மட்டுமே என் வாழ்நாள் லட்சியம். எனவே, தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அன்பிற்குரிய மருமகனே…இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும்போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும். அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் ‘என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’ என்று சொல்லும். எனவே, தயவு செய்து எனது மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உரையை மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் அர்ப்பணிக்கிறேன்!” என்று முடிகிறது அந்த பதிவு.

உண்மையான காதலின் வெளிப்பாடு!

மனைவி கனவனிடம் சொன்னாள்,
நான் கர்பமாக இருக்கிறேன் என்று…

அதற்கு கணவன் அவளை அணைத்து
முத்தமிட்டபடியே சொன்னான்,

’நாம் கர்பமாக இருக்கிறோம்’ என்று சொல்…

உன்னுள் வளர்வது என்னில் பாதி உன்னில் பாதி,
உன் கருவை என்னால் சுமக்கமுடியாது தான்
ஆனால் கர்பத்தில் இருக்கும் உன்னையும்
நம் குழந்தையையும் நான் இதயப்பூர்வமாக சுமக்கிறேன்…

இப்போது சொல்,

”நாம் கர்பமாக இருக்கிறோம்” என்று…

இது தான் உண்மையான காதல்.

 

கனவுகளின் சிற்பி!

meeran2_2490214fஅந்த விஞ்ஞானக் கூடத்தில் வேலை பார்த்துட்டிருந்த விஞ்ஞானி, தன் மேலதிகாரிகிட்ட,” நான் என் பிள்ளைகளை இன்று கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறேன். மாலை ஐந்தரை மணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் ” னு கேட்டாரு. மேலதிகாரியும் அனுமதிச்சாரு. வேலை மும்முரத்தில் ழூழ்கிய விஞ்ஞானி கடிகாரத்தைப் பார்த்தப்போ மணி இரவு எட்டரை. பிள்ளைகள் வீட்டில் பிரளயம் கிளப்புவார்கள்ங்கற பயத்தோட போனாரு. வீட்டில் மனைவி மட்டுமே இருந்தாங்க. “குழந்தைகள் எங்கே..?”ன்னு கேட்டதும் மனைவி சொன்னா “சரியாக ஐந்தரை மணிக்குக் கிளம்பி கண்காட்சிக்குப் போய் விட்டார்கள். உங்கள் மேலதிகாரி தான் வந்து அழைச்சிட்டுப் போனாரு” னு. விஞ்ஞானி வேலையில் ழூழ்கிவிட்டதைப் பார்த்த மேலதிகாரி, அவர் கவனத்தையும் கலைக்க விரும்பலை, குழந்தைகள் கனவையும் கலைக்க விரும்பலை. தானே சென்று குழந்தைகளை அழைத்துச் சென்றார். அந்த மேலதிகாரியின் பெயர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்…

விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும் வயிறு நிரம்புமா…..?

Plow-field

நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது…..

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?…..

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்…..

சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை…..

விவசாயி அழிந்துவிட்டால்
உன்னகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை…..

நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி…..

கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவ்வில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை…..

ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்…..

நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?…..

பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்…..

iPodடை’யும் Androidடை’யும் தின்னமுடியாது
Windowsஐ’யும் Vistaவை’யும் உன்ன முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க முடியாது…..

விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா…..?

விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பட முடியாது _ உண்மை
இன்று புரியாது.

மனம் வலித்தது பணம் சிரித்தது !

TrafficPolice

போலீஸ்காரரின் போன் அடித்தது
” ஹலோ”
“நீங்க திவ்யாவின் அப்பாவா?”
“ஆமாம். நீங்க”
“நாங்க சாய் ஹாஸ்பிடலிலிருந்
து
பேசறோம். உங்க மகளுக்கு ஒரு
ஆக்சிடெண்ட். உடனே வர முடியுமா?”
பதறியபடி போனார். அங்கே அவர் மகள் ரத்த
வெள்ளத்தில் கிடந்தாள்.
“யாரோ ஒரு பையன். குடிச்சிட்டு வண்டி
ஓட்டிட்டு வந்திருப்பான் போல. வந்தவன்
உங்க மகளோட ஸ்கூட்டில இடிச்சிட்டான்.
ஓவர் ஸ்பீடுங்கறதால் நல்ல அடி. ரெண்டு
பேரயும் பக்கத்தில் நின்றவங்க இங்கே
கொண்டு வந்து சேர்த்தாங்க. ”
சொல்லிக்கொண்டே போனாள் நர்ஸ். பைக்
ஓட்டிய பையனை பார்த்த திவ்யாவின்
அப்பா அதிர்ந்தார் ‘இவனா?’ என
விளரினார்..
சில நிமிடங்களுக்கு முன்…
“ஸ்டாப் ஸ்டாப். ஓரமா பைக்கை நிறுத்து.
குடிச்சிருக்கியா?”
“இல்ல சார்”.
“பொய் சொல்லாதே. அதான் வர்ற
வாடையில் எனக்கே போதை வந்திடும்
போல இருக்கே!”
“அது… வந்து.. வந்து…”
“அதான் வந்துட்டியே. அப்புறம் என்ன
வந்து வந்துன்னு உளறுறே.. சரி சரி
எவ்வளவு இருக்கு?”
“சார்…”
“தம்பி ட்ரங்க் அண்ட் ட்ரைவ் தப்புன்னு
தெரியும்ல… அப்புறம் என்ன இருக்கறதை
கொடுத்திட்டு வண்டியை எடுத்துக்க”.
” நூறு ரூபாய்தான் சார் கைல இருக்கு”
“பரவாயில்லை. கொடுத்திட்டு போ”
“இந்தாங்க சார்”
நூறு ரூபாயை வாங்கி பாக்கெட்டில்
திணித்தார்.

நர்ஸ் கேட்டார் “சார் என்ன சார் யோசனை?
இந்த மெடிசினை வாங்கிட்டு வாங்க
சீக்கிரம்” என்றவாறு ப்ரஸ்கிரிபசனை அவர்
கையில் திணித்தாள் நர்ஸ்.
மருந்தை வாங்குவதற்காக பாக்கெட்டில்
கை விட்டு பணத்தை எடுத்தார். சற்று
முன் அவன் லஞ்சம் கொடுத்த நூறு
ரூபாய் நோட்டும் வெளியே வந்தது.
அதிலிருந்த காந்தி அவரை பார்த்து
சிரித்தது போல தெரிந்தது….!!!
“””” படித்து பிடித்தது “””””

காதலில் தோல்வி

11692488_844672252286803_5581957486450222251_nகாதலில் தோல்வி அடைந்த
ஒரு ஆணேயோ, பெண்ணையோ
காதலித்து பார்
உண்மையான காதலை உண்ர்த்துவார்கள்,
ஆனால் அவ்வளவு எளிதாக
அவர்களின்
காதலை பெற்று விட முடியாது .
முடிந்தால் பெற்று கொள்.