ஆழ் மனம் புகும் அன்பு!

வெகுநேரம் ஓய்விலிருந்துவிட்டு  கரும்புகையை கக்கியவாரும், ப்பாம் ப்பாம் என்ற ஹாரன் சப்தத்துடனும் பேருந்து நிலையத்திலிருந்து புரபட்டுசென்ற அந்த பேருந்தை, முதுகில் தோள்ப்பையோடு மூச்சிரைக்க ஓடி வந்து ஏறினான் கண்ணன்.

விடுதியின் மாதாந்திர விடுப்பில் வீடு திரும்பும் அவனுக்கு இப்பேருந்தை விட்டால், இரு பேருந்துகள் மாறி சில மணி நேரம் காத்திருந்து மற்றொரு பேருந்திலேறி வீடு செல்ல வேண்டும், அது தலையை சுற்றிவந்து வாய்க்கு உணவுகொடுப்பது போன்றது.

எனவே மூட்டை போல் முதுகில் கனமிருந்த போதும், தன் முயற்சியை ஒரு போதும் கைவிடாதவனாய் இப்பேருந்தை அடைந்தான்.

கீரைக் கட்டுகள், தக்காளிக் கூடைகள்,மற்றும் காய்கறி மூட்டைகள் நிறைந்த அந்த பேருந்தில் ஒரு வழியாக அவனுக்கு படிக்கட்டின் முன்பிருந்த இருக்கையில் இடம் கிடைத்தது. தன் தோள்ப்பையைக் கழட்டி மடியில் வைத்தவாறே பெருமூச்சு விட்டு இளைப்பாறிக்கொண்டிருந்தான்.

17265246965_f42b38b57d_bபேருந்து நகர்ந்து பழைய மார்கெட்டை தாண்டிய போது அவன் கண்ணில் தென்பட்டால் அவள், அழுக்குப் படிந்த சிகப்பு சேலை, வெள்ளை முடிகள் நிறைந்த தலையுடன், சுருங்கிய தோல்கொண்ட முகம், இப்படி தள்ளாடும் வயதிலும் தடிஊன்றி நின்றுகொண்டிருந்தாள் அந்த மூதாட்டி ஏக்கமாக.

அவளைப் பார்த்தபோது அவனக்கு தன் அம்மாச்சியின் ஞாபகம் வந்தது, விடுமுறை முடிந்து விடுதி திரும்பும் ஒவ்வொரு முறையும்  தந்தைக்கு தெரியாமல் அவனக்கு சிறிது பணம் கொடுத்து அனுப்பிவைப்பாள்  அவன் அம்மாச்சி.  இப்படி அவனுக்கு இம்மூதாட்டி அவன் அம்மாச்சியை நினைவு படுத்திக்கொண்டிருந்தாள்.

திடீர் என ஓர் அதட்டல் சப்தம் கேட்டு சுயநினைவிற்கு திரும்பினான், நடத்துனரின் குரல்தான், தனக்கு ஒரு போதும் முதுமை வராது என்ற எண்ணம் படைத்தவராய் அம்மூதாட்டியை திட்டிக்கொண்டிருந்தார்.

கால காலத்துல காடு போறதுலாம் பஸ்ல வந்து ஏன் உயிரை வாங்குது! எங்க போகணும் என்றார்! அதட்டியபடி

சின்ன சேங்கள்! என்று அதற்க்கான சில்லறையை சரி பார்த்து கொடுத்து பயணச்சீட்டு பெற்று பத்திரமாய் தன் முந்தானியில் முடிந்துகொண்டாள்! அம்மூதாட்டி.

dsc02169சல சல சப்தங்களுடன் பேருந்து நகர்ந்துகொண்டிருந்தது, நாகரீகமான நகரப்பேருந்து பயணம் போல் இல்லாவிடினும் சோலைகளுக்குள்ளே செல்லும் இரம்மியமான கிரமியப்பயணம் அது!

நிலைகுலைந்து தடுமாறிய மூதாட்டிக்கு தன் இடத்தை கொடுத்துவிட்டு எழுந்து நின்றான் கண்ணன், நாற்பதிற்கும் மேற்பட்ட பயணிகளின் மத்தயில் மனிதாபிமானம் கொண்டவனாய் தனித்து காட்டியது அவனின் செயல்.

ஒரு சில நிறுத்தங்கள் தாண்டி கண்ணனுக்கு அம்மூதாட்டியின் அருகிலே இடம் கிடைத்தது, தன் கால்களை ஒடுக்கி கண்ணனுக்கு வழி அமைத்தாள் அவள்.

பயணம் தொடர மூதாட்டி கேட்டாள் எந்த ஊரயா நீ?

பழைய ஜெயகொண்டம் என்று பதில் சொல்லிவிட்டு, ஜன்னல் வழியே தன் கண்களை திணித்து சோலைகளின்  அழகை ரசித்தவனாய் பயணத்தின் உன்னதத்தை அடைந்துகொண்டிருந்தான் அவன்.

மூதாட்டி தொடர்ந்தாள், அங்க யார் மகனயா நீ என்றால்!

மாட்டு வியாபாரி முருகனின் பையன் ஆயா! என்று தன செய்கையை தொடர்ந்தான்.

உங்கப்பன் குணம் மாறாம இருக்குயா என்றவரே, அவன் தந்தையின் பெருமைகளை கொட்டிக்கொண்டிருந்தால் அந்த மூதாட்டி.

மகனால் ஒதுக்கப்பட்ட அவளுக்கு, ஏதோவொரு வகையில் அவன் தந்தை ஆறுதலாய்  அமைந்திருந்த பிரதிபலிப்பே அந்த மூதாட்டியின் அன்பான ஆதங்கம்!

Aayaஎங்கப்பாவ தெரியுமா ஆயா உங்களுக்கு என்றான் கண்ணன் வியப்புடன். தெரியும்யா உங்கப்பன் மனசு ஒருத்தனுக்கும் வராது, அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்துருக்க! என்று தன் கேள்விகளை தொடர்ந்தாள்.

என்ன படிக்கறயா? எட்டாவது படிக்கிறேன் ஆயா என்றான் அவன்.

எங்க படிக்கற? காக்காவாடிலங்க ஆயா என்றான்.

நல்லா படிக்கனும்யா, நீ படிச்சு பெரிய ஆள் ஆனாதான் உங்கப்பன் கஷ்டம் தீரும் என்று சொல்லி கொண்டிருக்கும்போதே அவள் இறங்கும் நிறுத்தம் வந்தடைந்தது பேருந்து.

சரியா நான் கிளம்புறேன் அம்மாவ அப்பவெல்லாம் கேட்டதா சொல்லு என்று சொல்லிவிட்டு தடியை ஊன்றி தடுமாறி படி இறங்கிச்சென்றால் மூதாட்டி.

அவன் தந்தையின் பழக்கவழக்கமும், இறக்க குணங்களையும் உணர்த்திய அம்மூதாட்டியின் சொற்களை புரியாத போதிலும் மெய்சிலிர்த்தவாறே கண்ணனின் பயணம் தொடர்ந்தது.

அசோகர் நட்ட மரங்களின் அணிவகுப்பு அவனை அன்புடன் வரவேற்ற போதிலும் அவன் முகம் வாடியே காணப்பட்டது. சிறு வயதிலிருந்து விடுதியிலிருந்த கண்ணனுக்கு வீட்டிற்கு செல்வதில் ஆர்வமில்லையோ என்றிருந்தது அவனின் முகம். எப்போதும் விடுதியிலிருந்து வீடுதிரும்பும் கண்ணனின் முகம் புன்னகையுடனும் தன் வீட்டை அடையும் நேரத்தையும் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கும்.

செல்லும் வழியெங்கும் கொஞ்சும் குயில்களின் சப்தங்களும், ஆடும் மயில்களின் தொகுப்பும் அவனுக்கு புலப்படவில்லை.

அவன் நினைவில் மணி என்பவன் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் வீடு திரும்பும்போது அவனை முதலில் வரவேற்பது மணி ஒருவனே!

கடந்த முறை வீடிற்கு வந்தபோது மணியின் நிலை மிகவும் மோசமானதாய் இருந்தது, கண்ணனின்  தாயை காக்க தன் உயிரை துச்சமாக எண்ணி துணிந்து பாம்பிடம் சண்டையிட்டு, தாயைக் காத்தவன் மணி.

தாயைக் காக்கும் 16-05-12GrassSnake061HMcropபோராட்டத்தில் பாம்பிடம் கடிபட்ட மணி சுயநினைவிழந்து எங்கெங்கோ சென்றுவிட்டான், அங்கிருந்த மக்கள் மணியை அடையாளம் கண்டு கண்ணனின் வீட்டில் சேர்த்தனர். வைதியங்களில் பலனின்றிப்போக   இரண்டு நாட்கள் எமனுடன் போராடி கண்ணனை கண்ட நிலையில் உயிரிழந்தான்.

மணி உயிரிழக்கும் நாள் தான் கடந்தமுறை கண்ணனின் விடுமுறை, அவனைக்  காணவே தன் சாவிடம் போராடிக்கொண்டிருந்ததுபோல் கண்ணனின் அருகில் வந்து அமர்ந்து இறந்தான் மணி.  

அச்சம்பவமே கண்ணனின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது, ஜெயகொண்டம்லா இறங்குங்க என்ற குரல்கேட்டு இறங்கினான்.

அங்கிருந்து இரண்டு மயில் நடக்க வேண்டும் கண்ணனின் வீட்டை அடைய, யாரையும் எதிர்பாராதவனாய் தோள்ப்பையை மாட்டிக்கொண்டு நடக்க தொடங்கினான்.

தம்பி, ஏய் கண்ணா என்ற குரல் அவன் காதில் ஒலிக்க திரும்பினான், டீக்கடையிளிருந்து  அவன் தந்தை அழைத்தார்.

தந்தையை அடைந்த கண்ணனிடம், அவர் நல்லா இருக்கயா?

எதாவது சாப்பிடு என்றார். இல்லப்பா எதுவும் வேண்டாம் என்றான் கண்ணன். ஏன் இவ்வளவு நேரம் என்று தொடர்ந்தார் அக்கறையுடன்,

எப்பவும் இந்நேரம் தானப்பா வருவேன் என்றான்.

யாரு முருகா இது? நம்ம வாரிசா? என்றார் உரத்த குரலில் அங்கு வந்த முதியவர் ஒருவர்.

ஆமா இபோதா லீவ்ல வந்திருக்கான்! என்றார் தந்தை.

எங்க படிக்குறான் என்றார் முதியவர். காக்காவாடில படிக்குறான் என்றார் தந்தை.

நல்லா படிக்கணும் தம்பி, உங்கப்பா கஷ்டப்பட்டாலும் உன்ன நல்ல இடத்துல படிக்க வைக்கிறான் என்றார். தலையை ஆட்டிவிட்டு தந்தையின் வண்டி அருகே சென்றான்.

3733745817_ca6f6e60f0உதைத்து உதைத்து அந்த புல்லெட் வண்டிக்கு உயிர் கொடுத்துவிட்டு, வாப்பா போலாம் என்றார், அவன் தந்தை, வண்டியில் ஏறி அமர்ந்த அவன், தன் இருபது மயில் பயணத்தை இரண்டு மயில் தூரத்தில் சொல்லி முடித்து அம்மூதாட்டியின் உறவையும் அறிந்தான் கண்ணன்.

பொர் பொர் என்ற புறாக் கூண்டின் சப்தமும்,பூத்துக்குலுங்கிய ரோஜா செடிகளும், வானுயர்ந்த நெட்லிங் மரங்கள் இவை அனைத்தும் பழயணவாய் தெரிந்தாலும், மணியின் வரவேற்ப்பு இல்லாத இந்த விடுமுறை புதிதாய் அமைந்திருந்தது கண்ணனுக்கு.

பையைக் கழட்டி திண்ணையில் வைத்துவிட்டு, வீட்டு முன்பிருந்த கேட்டை  திறந்து உள்ளே சென்ற அவனை,

யாரோ புதிதாய் தன் வீட்டிற்க்குள் வந்ததை அறிந்த அந்த புதிய உறுப்பினர் கண்ணனை பார்த்து யாரடா நீ? இங்கே எதற்கு வந்தாய்? என்றவாறு கத்தினான்.

சப்தம் கேட்டு அங்கே வந்த தந்தை டேய் மணி அண்ணன்டா, கத்தாத பொய் அம்மாவை கூட்டிட்டு வா என்றார்!

கண்ணனின் தந்தையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டவனாய்  அங்கிருந்து சென்றான் அந்த புதிய வரவான மணி.

உருண்டையான கண்கள், கொலு கொலு வென்ற உடல், தொங்கும் கன்னங்கள் இவை அனைத்தும் கண்ணனுக்கு இறந்த மணியின் நினைவை தூண்டியது.

யாருப்பா இது? என்றான் தந்தையை பார்த்து.

இதுவா மணிப்பா, உனக்காகத்தான் இவ்வளவு சீக்கிரம் இவனை கண்டுபிடித்துக் கொண்டுவந்தேன் என்றார்.

தன் மகனின் சந்தோசத்திற்காக தன்னால் முடிந்த எல்லை வரை செல்லக்கூடிய ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவன் அவன் தந்தை. என்பது அவரின் செய்கையில் தெரிந்தது.

மணி மணி என்று அவனை பின்தொடர்ந்தான் கண்ணன். தனக்கு பழக்கமில்லாதவர் தன்னை துரத்துவதை கண்டு அஞ்சிய மணி தந்தையிடம் தஞ்சம் அடைந்தான்.

தந்தையிடமிருந்து தன்னை அறிமுக படுத்தியவனாய் மணியை தூக்கி, கன்னங்களை கிள்ளி, தலையை கோதி அண்ணன் என அவனுக்கு உணர்த்தினான்.

மணியை தூக்கிக்கொண்டு தன் தாயைத்தேடி தோட்டத்திற்குள் நுழைந்து அம்மா அம்மா என்று உரக்க கத்திய கண்ணனின் குரலுக்கு ஒய், ஒகோய் என்று பதில் வந்தது வெகு தூரத்தில்.

குரல் வந்த திசையை நோக்கி நடந்து தன் தாயின் வேலை இடத்தை அடைந்த கண்ணனின் பேச்சு அனைத்தும் இறந்த மணியை பற்றியே இருந்தன.

அம்மா! இவன் நம்ம மணி மாதிரி  வருவானா மா! அதே மாதிரி வணக்கம்லா வச்சு வரவேற்ப்பானா? நான் கை நீட்டிய போதெல்லாம் எனக்கு கை கொடுப்பானா? என்றே கேட்டுக்கொண்டிருந்தான்.

மணியின் வரவின் இன்பத்திலிருந்த தன் மகனின் புண்முகத்தில் முத்தமிட்டு கண்டிப்பா பழைய மணியாய் வருவான் என்றால் அவன் தாய்.

இரண்டு நாட்கள் விடுமுறை முடியும்வரை மணியுடனே தன் பொழுதினை கழித்தான். மணிக்கு பால் கொடுப்பது, உணவு ஊட்டிவிடுவது, விளையாடுவது மட்டுமின்றி தன்னுடைய இன்ப துன்பங்களையும் பேசி மகிழ்ந்தான். தன்னுடன் பிறக்காத போதிலும் ஒரு தம்பியாய் மட்டுமின்றி தன் தாயை காக்க தன் உயிரை மாய்த்த மணியின் நினைவு அவன் மனதைவிட்டு விலகாத போதிலும், தன் தந்தை தத்தெடுத்த இந்த புது மணி, தான் கழித்த நினைவுகளெல்லாம் மறக்க செய்யாமல் இறந்த மணியாகவே இவனும் இருப்பான் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொண்டான் கண்ணன்.

விடுப்பு முடிந்து விடுதி திரும்பிய கண்ணனின் எண்ணமெல்லாம் அடுத்த விடுப்பு எப்போதென்றுதான், மீண்டும் எப்போது விடுப்பு வரும் நாம் எப்போது மணியை பாப்போம் என்றே ஓடிக்கொண்டிருந்தது அவன் எண்ணங்கள்.

40_-Vizslaஇரண்டு மாதங்கள் பின்னர் விடுப்புக்கு வீடு திரும்பும் கண்ணனுக்காக வழி மீது விழிவைத்து காத்திருந்த மணி,  கண்ணனின் உருவம் கண்டதும் தன் முன்னிரு கால்களையும் முன்நீட்டி வாழை ஆட்டி வணக்கம் வைத்து வரவேற்றது மணி.

தொடரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s