மனதின் நெருடல்‬

பலரும் பலவகையில் பேசி சென்றுவிட்டனர் இந்த சுவாதியை. சுவாதியின் பிணத்தை வைத்து பலரும் சுய விளம்பரம் பெற்றுக்கொண்டனர்.

உங்களைச்சொல்லி குற்றமில்லை ஊருக்கு ஊர் மேடை போட்டு கிடைத்த சாதியை வைத்து புகழ்ந்து பேசியும் இகழ்ந்து ஏசியும் உங்கள் மனங்களை கவர்ந்து கட்சி நடத்திவரும் கானல் நீரின் தவப்புதல்வர்களை தேர்ந்தெடுத்தவர்கள் தானே நீங்கள்.

மேடையிலும், தொலைகாட்சியிலும் தனக்கு தேவையான விளம்பரங்களை அவர்கள் தேடி தேடி பெற்றுக்கொள்ளும்போது அவர்களை பின்தொடரும் நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா.

கொல்லப்படும்போது தடுக்க யாருமில்லை, இன்றோ அவள் கொல்லப்பட்டிருக்க கூடாது என்றும், அவளை கொள்ளும்வரை ஒருவன் சென்றிருக்கிறான் என்றால் அவள் அப்படிப்பட்டவள் தானே என்றும் பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.

இதை அனைத்தும் தாண்டி தன் மடிக்கணினியில் தன் கைத்திறனைக் காட்டும் பல ஈனர்கள் ஒரு பக்கம். என்ன செய்ய பிணம் வைத்து பணம் செய்யும் ‪#‎ஊடகங்கள்‬மத்தியில் வாழும் உனக்கும் ஒரு விளம்பரம் தேவை தானே.

வெட்டியவன் குடும்பத்திற்கு அரசாங்க உத்தியோகம் கேட்க்கும் ஈனத்தலைவர்கள் இங்கு இருக்கும் வரை‪#‎பெண்களை_எங்கே_பேணிக்காப்பது‬. ஜாதியை வைத்து அரசியல் செய்யும் அற்பர்களே உன் அக்கா, தங்கைக்கு இதுபோல் நடந்தால் அப்போதும் நீர் இதுபோல் இருப்பாயா..
அது சரி திராவிடம் என்ற சொல்லில் தானே இங்கே அணைத்து சாதி வெறிகளின் தீ பொறிகலும் உள்ளது.

சமூகவளைதளவாசிகளே தங்களுக்கு தெரியாத விசயங்களையும், வதந்திகளையும் வீண் விளம்பரத்திற்காக பரப்பாதீர். இங்கே நீங்கள் சுவாதியை பற்றியோ இல்லை ராம்குமாரை பற்றியோ தவறான கருத்துக்களை பரப்பியதால் உங்களுக்கு கிடைக்கும் லைக்குகளும் ஷேர்களும் உங்களுக்கு ஒன்றும் தரப்போவதில்லை ஆனால் தன் மகளை இழந்து தவிக்கும் அந்த பெற்றோர்களின் மனதில் மீண்டும் மீண்டும் ரணங்களை உருவாக்காதீர்..

மாற்றங்களையும், மனிதநேயங்களையும் பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் மட்டும் காணும் காலம் ஆனது, இத்திருநாட்டின் சாபமே.

என் அன்பு சகோதரிகளே‪#‎இது_மான்களை_வேட்டையாடும்_புலிகள்_நிறைந்த_உலகம்_தான்‬ ஆனால்‪#‎நீங்கள்_மான்கள்_அல்ல_மான்_தோல்_போத்தி_வளர்த்த_சிறுத்தைகள்‬. மானாய் ஓடினால் சாகும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு சாயங்காலம் பேஸ்புக்கில் RIP ஸ்டேடஸ் மட்டும் தான் போடுவார்கள் இந்த மனிதாபிமானம் உள்ள மனிதர்கள். சிறுத்தையாக சீறு, சினம்கொண்டு எழு இனி ஒரு பெண்ணும் ரத்தம் சிந்த மாட்டார்கள் இம்மண்ணில்.

– குமரேசன் செல்வராஜ்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s