பட்டினிச் சாவு!

11850219_908321385890451_2081288614_nமழையில்லை, கடன் தொல்லை, பராமரிப்பிற்கு  ஆட்கள் இல்லை என்று விவசாயம் மறந்து அவன் தன் நிலங்களை விற்று தன்  குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டு தன் மகனை இன்ஜினியர் படிக்க வைத்தான். தான் பட்ட கஷ்டம் தன் மகன் படகூடாது என்று….

மகனும் விவசாயமேன்றால் என்ன வென்றே தெரியாத ஐ.டி தொழிலாளி ஆனான். தன் நிலங்களை இழந்து, உணவுக்காக மாதா மாதம் கடையில் அரிசி வாங்குவதை நினைத்து வருந்தியே உயிர் பிரிந்தார் அந்த தந்தை. தந்தையின் மரணத்திற்கான காரணம் இதுதான் என்று தெரியாத அந்த இன்ஜினியர் மகன். தன் வாழ்வை ஒரு ஐ.டி தொழிலோடு தொடர்ந்தான்.

அவன் அன்றாட வாழ்க்கை ஒரு எந்திரம்போல் ஓடி கொண்டே இருந்தது எந்த மாற்றமும் இன்றி, அந்த எந்திர வாழ்கையில் செய்தித்தாள் வாசிப்பதும் ஒரு செயல்பாடாக இருந்ததது. அப்படி அவன் படிக்கும் செய்தித்தாளில் தினமும் தொடரும் ஒரு செய்தி அவனை வெறுப்படைய செய்தது அது வேறு ஒன்றும் இல்லை விவசாயி பட்னிச் சாவு என்பதுதான், அதை பார்த்த உடனே இவர்களுக்கு வேற வேலையே இல்லையா என்று அந்த செய்தியை தட்டிக் கழித்துவிட்டு அடுத்த சினிமா செய்திக்கும், விளையாட்டு செய்திக்கும் முக்கியத்துவம் கொடுத்து முடிவடையும் அவன் செய்தித்தாள் வாசிப்பு.

இவ்வாறே தொடர்ந்த அந்த வாழ்க்கையில் ஒரு நாள் அவன் கனவில் அசிரிரி ஒளித்தது,

தினந்தோறும் செய்தித்தாளில் விவசாயியின் சாவை அலட்சிய படுத்தும் அனைவரும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் விவசாயி தற்கொலை, விவசாயி பட்ட்னிச்சாவு என்றெல்லாம் வரும்போது நீங்கள் தட்டி கழித்து அடுத்த பக்கம் விளையாட்டு செய்திகளுக்கும், சினிமா செய்திகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கலாம் ஆனால் உண்மையில் நீங்கள் கொடுக்கவேண்டிய முக்கியத்தும் அவர்களுக்கு அல்ல, ஏன்னெனில் அவர்கள் உங்களுக்கு உணவளிக்கவில்லை விவசாயிதான் உங்களுக்கு உணவளிக்கின்றான். நீங்கள் அலட்சிய படுத்தும் அளவிற்கு அந்த செய்தி சாதாரண செய்தி அல்ல மனித வர்கத்தின் அழிவு எச்சரிக்கை.

பத்தோடு பதினொன்றாக எடுத்துக்கொள்ளும் செய்தி அல்ல அது, ஆம் சாகும் ஒவ்வொரு விவசாயி ஒன்றும் ஏழையல்ல அவன் நிலத்தை விற்றால் அவன் உன்னை விட செல்வந்தன் ஆவான். ஒரு விவசாயி இறக்கும்போது விவசாயியின் எண்ணிக்கை மட்டும் குறைவதில்லை நீ உண்ணும் உணவின் அளவும்தான் என்பதை மனதில்கொள். தன் நிலத்தை எல்லாம் விற்றுவிட்டு உன்னைப்போல அவனும் வேறு தொழிலில் செய்தால் நாம் அனைவரும் உண்ண இம்மண்ணில் மிச்சமிருப்பவை மனித சதைகள் மட்டும்தான் மிஞ்சும்.

Plow-fieldஉண்ண உணவில்லாத போதிலும் உழும் மாட்டிற்கு உணவு சேமிப்பவன் அவன். உனக்கு உணவளித்துவிட்டு வெறும் கூழை குடிப்பவன் அவன் உழவன். உழவன் என்றுமே ஏழ்மையானவனல்ல அவன் இருப்பதை வைத்து சந்தோசமாய் வாழதெரிந்தவன். அவன் EMI -ல் செல்போன் வாங்க தெரியாதவன்தான் ஆனால் இமைப்பொழுதிலும் உழைக்க தவறாதவன்.

சேற்றிலே அவன் கால் வைத்தால்தான் நீ சோற்றிலே கைவைக்க முடியும் என்பதை என் தமிழ் மொழி மிக அழகாக எடுத்துரைத்துள்ளது

” சேறு அதில் கால் வைத்தால் சோறு என்றாகும்”

வேர்வை சிந்தாமல் ACயில் வேலை செய்யும் உனக்கு எப்படி தெரியும், ACயை தாண்டியும் இயற்க்கை தென்றல் அவனிடம் பாடும் தெம்மாங்கு பாட்டைப்பற்றி. நீ குளிர உலகை வெப்பமாக்கி மீண்டும் அவன் வயிற்றில் அடித்து மரணபடுத்திவிடுகிறாய். விவசாயி மரணம் நிறுத்த நீ ஒன்றும் உன் தொழிலை விட வேண்டாம் மாதம் ஒரு மரம் நட்டாலே போதும். 

எங்கோ இருக்கும் எவனுக்கோ நீ கொத்தடிமையான விசுவாசி. உனது நேரம் அனைத்தும் அவனுக்குச் சொந்தம். யாருக்கோ செலவிடும் அந்த நேரங்களில் உனக்கான உணவை தயாரிக்கும் உன் அப்பன் விவசயிக்காக கொஞ்சம் செலவிட்டுபார் வாழ்வின் உன்னதம் புரியும்.

பொன்னி, சம்பா, என வகை வகையாய் அறுவடை செய்து உனக்கென தந்துவிட்டு குருணை அரிசியில் குடும்பம் வழர்ப்பவன் உழவன்.

நாளுகுக் நாள் மாறும் நாகரீகத்தினால் உழவனை மதிக்க தவறினாய், ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதே மாண்டு விழும் ஒவ்வொரு விவசாயியின் உடல்கள் வெறும் சடலங்கள் அல்ல நம் நாட்டின் முதுகு தண்டுகள் அது.

நம் வம்சத்தின் முதல் பட்டதாரி என்று பெருமை படுவதை விட கடைசி விவசாயி என்று வருத்த படுவதே சரி.. 

தினமும் செய்தித்தாளில் படித்து அலட்சிய படுத்தும் செய்தி அல்ல ” விவசாயி பட்டினிச்சாவு”

அவன் வயிற்று பசிக்காக அவன் சாகவில்லை உனது பசியை போக்க தன்னால் முடியவில்லை என்றே அவன் உயிர் துறக்கிறான்.

காலத்தின் கொடுமையினாலும், நாகரீகத்தின் மாற்றத்தினாலும் விவசாயத்தை கைவிட்டு வருந்தும் அணைத்து விவசாயிகளுக்கும், தான் உண்ண மறந்த போதிலும் எனக்கு உணவளிக்க தவறாத உழவனுக்கும் இக்கட்டுரையை சமர்ப்பணம்…

என் அப்பன் ஒரு விவசாயி என்ற கர்வத்துடன்.

– குமரேசன் செல்வராஜ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s