என் ஆசை கள்ளி!

FB_IMG_1452591503435கிடச்ச வேலையும் போச்சு! இப்போ என்ன செய்யறதுன்னு தெரியல என்றவாறே புலம்பிக்கொண்டிருந்தான் அவன், அந்த உயர்தர காப்பி ஷாப்பில்.

நடு வகிடு எடுத்து வாறிய தலை, பௌர்ணமி நிலவு போல வட்டமான பொட்டு, அமிர்தத்தினும் இனிமையான புன்னகையுடன் தோன்றியது அவளின் முகம் படி ஏறி மேலே வரும்போது.

அவளுக்கென்றே நெய்தது போலிருந்தது அவளின் கால் தொட்ட அந்த அம்பர்லா (Umbrella) சுடிதார்.

ஆளில்லா அந்த காப்பி ஷாப்பில் அவனுக்கு எதிராக வந்து அமர்ந்தாள், அவளின் அழகை ரசித்து தன்னை மறந்தவனாய் திடுக்கிட்டான், அவளை எதிரில் பார்த்தவுடன்.

“என்னடா புதுசா யாரையோ பாக்குறமாதிரி பாக்குற?”

“இந்த சுடிதார்ல அவ்ளோ அழகா இருக்கடி அதான் என்னையே மறந்து பாத்துட்டே இருந்தேன்.”

“டேய்! போன வாரம்தாண்டா இந்த சுடிதார் போட்டேன். அதுவும் இந்த சுடிதார் நீ தான்டா எடுத்த! இப்போ என்னடான்னா புதுசா ரசிக்குறேனு சொல்ற லூசு.”

“எப்போவுமே  நீ எனக்கு புதுசாதாண்டி தெரிவ என் ஆசை கள்ளி!”

“போதும்டா! ஐஸ் வச்சது! உன் புது வேலைலா எப்படி இருக்கு?”

“போடி! நீ வேற அவனுகளா வர சொன்னானுங்க இரண்டு நாள் ஊரெல்லாம் சுத்த வச்சுட்டு, இப்போ உனக்கு விருப்பமில்லன்னு அவனுங்களே சொல்றானுங்க”

“டேய்! விடுடா இது இல்லனா வேற வேலை, அவனுக்கு உண்ண மாதிரி ஒரு நல்ல ஆள் கிடைக்க குடுத்துவைக்கல”

“போடி இப்படியே சொல்லிட்டே இருக்க வேண்டிதான், நாள் ஓடிட்டே இருக்கு அவ்ளோ தானொன்னு தோணுது, பேசாம BPOக்கு போய்டலாம்னு தோணுதுடி”

“பொறுமையா இருடா எரும! எல்லாம் கிடைக்கும் நல்ல வேலையா, மனசுக்கு பிடிச்ச வேலையா அதுவரைக்கும் தேடு.”

“போடி! நான் இப்போ ஒன்னுமே இல்ல.”

“டேய் நான் இருக்கேன்டா ஒன்னும் இல்லன்னு சொல்லாத! பாரு இப்படி உண்ண பாக்க நல்லாவே இல்ல”

“ஏன் நல்லா இருந்தா தான் கட்டிப்பயா? அப்போ அமெரிக்கால இருந்து எவனாது சாப்ட்வேர் இன்ஜினியர் வருவான் அவன போய் கட்டிக்கோ.”

“என்னதா அமெரிக்கா மாப்பிள்ளையா இருந்தாலும் ஆப்ரிக்கா மாப்பிள்ளையா இருந்தாலும் என் மாமா போல வருமா…”

“ரொம்பத்தான் போடி!”

“என்னடா சாப்பிடலாம்?”

“எனக்கு ஒன்னும் வேணாம்டி”

“ம்க்கும்! இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல! சரி இரண்டு கோல்ட் காப்பி சொல்றேன்”

“ம்ம்ம்! அப்படி என்னடி என்ட்ட பிடிச்சுது உனக்கு, இப்படி லவ் பண்ற!

“போடா இந்த கேள்விய எத்தன தடவை கேட்ப எரும?”

“சொல்லுடி எரும!”

“எல்லோரையும்விட நீ வித்தியாசமா இருப்படா அதான்”

“வித்தியாசமா வா?”

“எப்போதும் உன் கண்ணுல ஒரு தேடலும் அன்பும் இருக்கும், அதிகமா ஆசைப்பட மாட்ட இருக்கறத வச்சு சந்தோசபடுவ, மத்தவங்களையும் சந்தோஷ படவைப்ப, உனக்கு பிடிச்சமாதிரி இருப்ப”

“என்னடி சினிமா டயலாக்லாம் பேசற”

“உண்மையாடா இப்போ கூட பாரு உனக்கு புடிச்ச வேலைக்குத்தான் போவேன்னு இருக்க. மத்தவங்கமாதிரி கிடைச்சதுக்கு போகாம உனக்கானத தேடுறல அதான்”

“நீ வேற ஏண்டி வேலைய பத்தியே பேசுற”

“இல்லடா! சரி விடு காலேஜ் லைப்ரரில தான் உண்ண மொத மொதலா பாத்தேன், அப்போ இருந்து அடிக்கடி லைப்ரரி வருவேன் நீ இருக்கயானு பாக்க”

“இது எப்போடி?”

“காலேஜ் வந்தப்பவேடா,  அப்புறம் நீ லைப்ரரி வரப்ப எப்படியும் நான் வந்துருவேன் புக் படிக்கறமாதிரி உண்ண சைட் அடிச்சுட்டு இருப்பேன்!”

“அடி கள்ளி! இத்தன நாளா சொல்லவே இல்ல!”

“இல்லன்னா உனக்கு தெரியாது பாரு! நடிக்காதடா மாமா, லவ் யு!“

“லவ் யு டி!”

( காதலியின் சிறு சிறு செயல்களையும் ரசிக்கும் காதலனும், காதலனின் சிறு சிறு துயரத்தை மறக்க வைக்கும் காதலியுமாய் இருந்தால் காதல் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமானதாய் அமையும்.)

-குமரேசன் செல்வராஜ்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s