Posted in படித்ததில் பிடித்தது

பெண்_ஒரு_மகாசக்தி…!!

12046942_999760826751478_4226060199130653985_n

எல்லா பெற்றோரும்.. தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில்.. கட்டிக் கொடுக்க வேண்டும் என்ன கனவு நியாயமான ஒன்று தான்..!!அவளுடைய பெற்றோரும்… அப்படி தான்.. மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!!படித்த மாப்பிள்ளை.. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன்.. இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!!

உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!!இருவரும் தினமும் அலைபேசியில்.. பேசத் தொடங்கினர்..!!திருமண நாள்.. நெருங்க,, நெருங்க.. அவள் வீட்டில் ஒரே பதட்டம்..!! வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது..!! இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..!!

Continue reading “பெண்_ஒரு_மகாசக்தி…!!”
Posted in படித்ததில் பிடித்தது

‘எனது மகளின் புதிய குடும்பத்தினரே…!’- ஒரு தந்தையின் உருக்கமான உரை

marriage couple 550 2

பெண்களுக்கு மட்டுமே இது நடக்கிறது. பிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு. ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தகைய இடம்பெயரும் தருணம் உணர்வுப்பூர்வமானது. அந்தவேளையில், பெண்ணைவிட பெண்ணைப் பெற்றவர்களுக்கு குறிப்பாக தந்தைக்கு நேரும் உணர்வுப் போராட்டம் சொற்களில் அடங்காதது.

Continue reading “‘எனது மகளின் புதிய குடும்பத்தினரே…!’- ஒரு தந்தையின் உருக்கமான உரை”
Posted in படித்ததில் பிடித்தது

'எனது மகளின் புதிய குடும்பத்தினரே…!'- ஒரு தந்தையின் உருக்கமான உரை

marriage couple 550 2

பெண்களுக்கு மட்டுமே இது நடக்கிறது. பிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு. ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தகைய இடம்பெயரும் தருணம் உணர்வுப்பூர்வமானது. அந்தவேளையில், பெண்ணைவிட பெண்ணைப் பெற்றவர்களுக்கு குறிப்பாக தந்தைக்கு நேரும் உணர்வுப் போராட்டம் சொற்களில் அடங்காதது.

Continue reading “'எனது மகளின் புதிய குடும்பத்தினரே…!'- ஒரு தந்தையின் உருக்கமான உரை”
Posted in மேற்கோள்கள்

பாமரனும் படித்தவனும்!

download

மனிதன் பாமரனாய் இருந்த வரை முதலாளியாக இருந்தான்

பட்டதாரி ஆனபின்பு தொழிலாளியாகவும் கொத்தடிமையாகவும் உள்ளான்…

– குமரேசன் செல்வராஜ் 

 

Posted in கவிதைகள், காதல்

முதலும் முடிவும்!

என் முதல் காதல் உன்னிடத்தில் தான் !

என் முதல் முத்தம் உன்னிடத்தில் தான் !

என் முதல் தீண்டலும் உன்னிடத்தில் தான்!

காதலும் கனிந்தது,

கவிதைகளும் மலர்ந்தது,

முத்தங்களும் கசிந்தது,

தீண்டலும் சிவந்தது,

தண்ணீர் தேசத்தில் தவிழ்ந்ததும்

கண்ணீர் விட்டு கதறியதும் உன்னால் தான்!

காதலென்னும் சமுத்திரம்

கானல் நீராய் போனது,

உதடுகள் வறண்டது,

முதல் காதல் அது முடிந்து போனதா?

மொத்தமாய் என்னை கொன்று தின்றதா?

என்றும் என் முதலும் முடிவும் உன் காதல் தான்

– குமரேசன் செல்வராஜ் 

 

Posted in கவிதைகள், சமூகம்

புள்ளி

friend 3 black dotபுவியின் உருவம் நான்!

பிறப்பின் அர்த்தம் நான்!

தொடக்கத்தின் முடிவு நான்!

முடிவின் தொடக்கம் நான்!

உயிரின் உரிமை நான்!

உலகின் உண்மை நான்!

உலகம் அறியா மர்மம் நான்!

பிரிவின் சக்தி நான்!

பிரிந்தபின் தொடர்வின் யுக்தி நான்!

புரியும் புக்தி நான்!

புரியா புதிரும் நான்!

மனிதா உன் தொடக்கமும் நான் முடிவும் நான்!

– குமரேசன் செல்வராஜ்

 

Posted in கவிதைகள், காதல்

உன் முன்னே! என் கண்ணே!

tumblr_nq3a0iw1wH1takhpwo1_500

ஆசை அனைத்தும் அவள் கண்களில் கண்டேன்

அடையா ஆசையாய் இருப்பினும்

ஆசை கொண்டாய், உனக்காக அல்ல

எனக்காக!

காதலின் சுவையை தந்தவளே

கனிரசமும் இனித்ததில்லை இது போன்று!

அமிர்தமே ஆயினும் உன் சிரிப்புக்கும், சினுங்களுக்கும்

ஈடாகுமா!

பல்லாயிரம் சுமைகள் சுமந்து, அயராது தடைகளை உடைத்து

வலியோடும், சோர்வோடும் வந்ததென்னவோ

உன்னை காணத்தானே என் அன்பே!

அறுபது வயதே ஆயினும் ஆறு வயது சிறுவனாக மாறினேன்

உன் முன்னே என் கண்ணே!

– குமரேசன் செல்வராஜ்

 

Posted in கவிதைகள், காதல்

அன்பின் அர்த்தமது!

Sharing-Love

ஆயிரம் பொய் கொய்து

உனக்கென ஒரு கவி தொகுதேன்

அக்கவி உன்னை அடைந்த பொது அத்துணை

பொய்களும் மெய்யாகிருக்க, என்னை

நானே வியந்துகொண்டேன் எழுதிய

பொய்களெல்லாம் மெய்யானதெப்படி அன்பே!

அங்கே நான் தொகுத்தது பொய்கள் அல்ல

என் மனம் உணர்ந்த உன் அன்பின் அர்த்தமென்று அப்பட்டமாகியது!

 

                                                – குமரேசன் செல்வராஜ்