நாம் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

வாழ்க்கை என்பது இறைவனால் அனைவர்க்கும் கொடுக்கப்பட்ட வரம். அனால் நாம் அதனை எவ்வாறு வாழ்ந்துகோண்டிருக்கிறோம். நமக்கான வாழ்வையா இல்லை மற்றவர்களுக்கான வாழ்வையா. மற்றவர்களுக்கான வாழ்வை தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆம் நாம் நமக்கு கிடைத்த வாழ்வை மற்றவர்களின் சொல்லுக்கு அடிமை படுத்தி நம் வாழ்வை துளைத்து யாரோ ஒருவனின் சொல்லுக்கு பயந்து மாற்றியமைத்து மாயை யான வாழ்வை வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். யார் அவன் ஏன் அவன் சொல்லுக்கு நாம் வாழ வேண்டும் என்று யாரும் சிந்திபதில்லை. அப்படி ஒருவன் சிந்தித்து வாழ தொடங்கினால் அவனுக்கு கிடைக்கும் பட்டம் என்ன தெரியுமா ஒழுக்கம் கெட்டவன், மரியாதை அட்றவன். ஏன் இப்படி ஒரு கட்டாயத்தில் நாம் வாழவேண்டும் யார் அவன், அவன் ஏன் நம்மை பற்றி பேசுகிறான் என்று ஆராய்ந்து பார்த்தால் அவன் தன் வாழ்வை ஒழுங்காக வாழ தெரியாதவன். ஏனெனில் அவன் வாழ்வை வாழும் நேரத்தில் அடுத்தவனை ஏளனம் செய்து வாழ்வை வீணடித்து கொண்டிருக்கும் ஒரு முட்டாள். அப்படி பட்ட முட்டாளின் சொல்லுக்காக நம் வாழ்வை மாத்திக்கொள்ளும் நாம் எப்படிப்பட்ட முட்டாளாக இருக்ககூடும்.

இதன் அனைத்திற்கும் கௌரவம் என்னும் ஒரு சொல் தான் காரணம் ஆம் அவரை போல நாம் இல்லை, இந்த உடையை நாம் அணிந்தால் நம்மை அவர்கள் ஏளனமாக பார்ப்பார்கள், இப்படி அவர்கள் சொல்லுவார்கள் இவர்கள் சொல்லுவார்கள் என்று நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்வை நாமே அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துவிடுகிறோம் அவர்களும் மற்றவர்களை பேசியே அவர்கள் வாழ்வை துளைத்து விடுகின்றனர். இப்படி நமக்கு கிடைக்கப்பட்ட வாழ்வை நாமும், மற்றவர்களுக்கு கிடைகபட்ட வாழ்வை அவர்களும் வாழாமல் துளைத்து விடுகிறோம். ஆக மொத்தத்தில் யாரும் அவரவர் வாழ்வை வாழ்வதில்லை. இதற்கு என்ன கரு என்று ஆராய்ந்தால் சில நிகழ்வுகளை இங்கே எடுத்துகாட்டாக கூற நேர்ந்துள்ளது ஆம், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் அவர் தந்தை சொல்லும் அறிவுரைகள் என்ன தெரியுமா “தம்பி நீ நன்றாக படித்தால் தான் கோபால் மாமா மாறி பொறியியல் படித்து கை நிறைய சம்பாதிக்க முடியும்” என்றார். இங்கு அவர் செய்த மிகபெரிய தவறு கோபால் மாமாவை எடுத்துகாட்டுக்கு கூறியது தான். கோபால் அவருடைய வாழ்கையை வாழ்ந்துகோண்டிருகிறார் அதை ஏன் நாம் வாழ வேண்டும். அவர் பொறியியல் படித்து நல்ல நிலையில் உள்ளார் என்பது அவரின் அடையாளம் அதனை ஏன் நாம் அடைய வேண்டும் அவருடைய அடையாளத்தை அவர் தக்க வைத்துக்கொண்டார். அதை ஏன் நாம் எடுக்க வேண்டும் நமக்கென்று ஒரு அடையாளத்தை நாம் உருவாக்க மறந்து விடுகிறோம்.அந்த தந்தை கோபால் மாமாவை பற்றி சொல்லாமல் மகனே நீ நன்றாக படித்தால் தான் உனக்கு பிடித்த துறையில் நீ சாதனை படைக்க முடியும் என்று சொல்லி இருந்தால் அந்த பையனின் மனதில் தனக்கான அடையாளத்தை தேட வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கும். அதை நாம் ஒருவரும் செய்வதில்லை அதனால் தான் நம் பிள்ளைகளும் செம்மறி ஆடுபோல் மற்றவர்கள் பின்சென்று தன் அடையாளத்தை துளைத்து விடுகின்றனர். 10502509_1638215633108667_2970418410787736659_nகோட்சே வாக இருக்கட்டும் காந்தியாக இருக்கட்டும் அவர் அவர் அவர்களுகேன அடையாளத்தை இன்றுவரை தக்கவைதுள்ளனர் அதற்கு காரணம் அவள்கள் தத்தம் வாழ்வை தன் வழயில்  வாழ்ந்தவர்கள். சற்று யோசியுங்கள் நாம் ஒன்றும் ஐந்தறிவு உள்ள குரங்கில்லை மற்றவர்கள் செய்வதை நாமும் செய்வதற்கு. நாம் ஆறறிவு உள்ள மனிதர்கள் நமகென்று ஒரு பாதையை நாம் தன் அமைக்க வேண்டும். மற்றவர்கள் தம்மை பற்றி என்ன பேசுவார்கள் என்று எண்ணி வாழ்பவர்கள் என்றும் சாமானிய மாக்கள்(மக்கள்) தான். மற்றவர்கள் தன்னை பற்றி என்ன பேசினாலும் தன் காதுகலை அதற்கு கொடுக்காமல் தன் போக்கில் வாழுளும் என்னை போன்றவர்கள் என்றும் சாதனையாளர்கள் தான்.

எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதில்லை வாழ்க்கை எப்படி வாழ்கிறோம் என்பது தான் வாழ்க்கை.
நன்றி அன்புடன் குமரேசன்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s