சுஜாதாவின் பேசும் பொம்மைகள்.

சுஜாதா எழுதிய பேசும் பொம்மைகள் !

pesum pommaikal-500x500_0

இந்தக் கதையின் ஆதாரக் கருத்தான(Downloading) ‘டவுன் லோடிங்’ என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர் என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஓர் இயந்திரத்துக்கு மாற்றிப் புகட்ட முடியுமா என்று பலர் வியந்து இதுசாத்தியமே இல்லை என்றார்கள். இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி நிலையில் இது சாத்தியமில்லைதான். ஆனால் இன்று அமெரிக்கா போன்ற முன்னேற்ற நாடுகளின் முற்போக்கு ஆராய்ச்சி நிலையங்களில் ‘செயற்கை அறிவு’ என்ற இயலின் ஒரு பிரிவாக இத்தகைய மூளைச் செய்தி மாற்றும் ஆராய்ச்சிகள் செய்து சிறிதளவு வெற்றி கண்டும் இருக்கிறார்கள். இந்த வெற்றியின் ஒரு கற்பனை விரிவாக்கம்தான் ‘பேசும் பொம்மைகள்’.

கதைக்கரு

இணையதளத்திலிருந்து நாம் பதிவிறக்கம் செய்வதும் அதேபோல் பதவேற்றம் செய்வதும் சாத்தியம். அதுபோல் மனித மூளையை செய்தால் என்ன வாகும்? ஒரு மனிதனின் மூளையை நகல் எடுத்து அதனை இயந்திரத்தில் செலுத்தி மீண்டும் அதனை மற்றொரு மனிதனின் மூளைக்கு செலுத்தி அந்த நகலின் உரிமையாளன் போல் செலுத்தப்பட்ட மனிதனை இயக்க முடியுமா?

இத்துனை அறிவியல் சார்ந்த கற்பன்னையை கொண்ட நாவல் தான் சுஜாதாவின் பேசும் பொம்மைகள்!

பதிப்பகம்

உயிர்மெய் பதிப்பகம் 

எழ்தலரைப் பற்றி 

சுஜாதா நாவல் அனைத்தும் அறிவியல் சார்ந்த கருவிலேயே அமைந்திருக்கும். ஓர் கற்பனைக்கு எட்டாத சுவாரஸ்யமான, விறு விருப்பான கதை களத்தையே சுஜாதா தேர்ந்துப்பார் போல..

கதைச்சுருக்கம்

 மாயா என்னும் பெண்ணை மையமாக கொண்டே இக்கதை நகர்கின்றது. சி எம் ஆர் லேப் என்னும் ஓர் ஆராய்ச்சி கூடத்தில் துணை ஆய்வாலராக பணிகிடைத்த மாவிற்கு அனைத்துமே விசித்திரமாக இருந்தது. ஆம் நேர்காணலில் அவளிடம் எடுத்த பரிசோதனைகளும் எந்த சம்மந்தமுமில்லாது அவளின் குறளை பலமுறை சோதனை செய்ததும் மேலும் அவளின் அக்கா மேனகாவை மையமாக கொண்டே அவளிற்கு வேலைகிடைததும் அனைத்துமே விசித்திரமாகவே இருந்தது. மேனகா முன்னாள் ஆய்வாளராக பணிபுரிந்தவள். தொடர்ந்து மேனகாவின் பெயரை பயந்படுத்தியே அவளது முதல்வர்கள் அவளிடம் அறிமுகமாயினர். அவளது வேலையும் மேனகா என்னும் சுற்றுவட்டரதிலேயே சுழன்று கொண்டிருந்தது. அவளது முதல்வர்கள் சாரங்கபாணி மற்றும் நரேந்த்ரநாத் இருவரும் வித்தியாசமானவர்கள். ஒருவர் மீது ஒருவர் பொறமை கொண்டவர்கள். நரேந்தரநாத் சாந்தமானவர், சாரங்கபாணி அதற்கு நேர்மரயானவர் போன்றும் தோன்றுகின்றனர். இவையெல்லாம் தாண்டி அங்கு வேலை செய்யும் அனைவரின் வலது கைகலும் இடது கையைவிட அளவில் குறைந்தே காணப்பட்டது. அது அவளுக்கு ஓர் அமானுஷ்ய உணர்வை தந்தது. அவள் ஐய்யம்கொண்டு  சுனிலிடம் கேட்டால். சுனில் அவளுக்கு முன்பே அங்கு பணிபுரிபவன். அது பழைய மருந்தின் பாதிப்பு. இப்போது அவையேதும் பயன்படுத்த படவில்லை என்றான் அவளின் காதலன் சுனில். கதை சுழல ஆரம்பித்தது. மாயா தன்னை ஒரு சோதனை பொருளாக பயன்படுதுகிறார்களோ என்று சந்தேகம் எழுந்தது இருப்பினும் அவர்கள் அவளிடம் மிக இனிமையாக நாடகமாடினார்கள், இருந்தும் அவளின் சந்தேகம் நீண்டது ஒருவேளை தன் அக்கா மேனகாவை மூளை சார்ந்த சோதனையில் பயன்படுத்தி மறைத்து வைத்துள்ளனரோ என்று. சுனிலும் அவளை விட்டு வெளிநாடு சென்றுவிட அவளை கண்காணித்த அவளது முதல்வர்கள் அவளை அடிமை படுத்தினர், அவளையும் மறைத்தனர்.  அவளின் ஐய்யம்கொண்ட விசயங்களை தான் பெற்றோரிடம் அவ்வப்போது சொன்ன போது பணத்திற்காக அவர்கள் அவளை கட்டாயபடுத்தி வேலைக்கு அனுப்பினர். இப்போது அவள் சொன்ன அனைத்தையும் ஆராய்ந்து சுனிலின் உதவியால் கணேஷ் மற்றும் வசந்திடம் சென்றனர் இவர்கள் இருவரும் பிரபலமான சட்ட ஆலோசகர்கள். மாவின் கதையை கேட்டு வழலக்கை கையில் எடுத்து ஆராய்ந்து சென்னையிலிருந்து விஜயவாடா வரை சென்று உயிரையும் இழக்க தெரிந்தனர். மாயவையும் அவள் தலையில் பொருத்தப்பட்டிருந்த  “சிப்” பையும் அகற்றி வீட்டில் சேர்த்தனர். இருப்பினும் சாரங்கபாணி இறந்ததுபோல் நாடகமாடி நரேந்தரநாத்துடன் வெளிநாடு செல்ல புறப்பட்டதையும் கணேஷ் அறிந்தான் .

“திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ” என்பதே கதை முடிவில் தெரியவந்த நியதி.

சுஜாதா தன் கதை களத்தை அறிவியல் மையமாக கொண்டது சுவாரஸ்யமானவை என்றாலும் பெண்ணை வர்ணிக்க அவர் பயன்படுத்தும் வாக்கியங்கள்யாவும் ஆணாதிக்கமாய் தோன்றுகிறது.

-குமரேசன் செல்வராஜ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s